எச்சரிக்கை! கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ‘பானி பூரி’ விற்க தடை...
`பானி பூரி`, `பானி பூரி` என்று ஏங்குகிறவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது. ஆம், கான்பூரில் செவ்வாய்க்கிழமை முதல் `பானி பூரி` விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
'பானி பூரி', 'பானி பூரி' என்று ஏங்குகிறவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது. ஆம், கான்பூரில் செவ்வாய்க்கிழமை முதல் 'பானி பூரி' விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
'Unlock 1.0'-ன் கீழ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் தெரு உணவு வண்டிகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து மாவட்ட நீதவான் பிரம்மதியோ ராம் திவாரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
"தவிர, இந்த ஸ்டால்களில் சமூக இடைவெளி இல்லாதது காரணமாகவும், கொரோனா தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் இருக்கும் வகையில் பானி பூரி விற்பனையை நாங்கள் தடை செய்துள்ளோம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இணைய வழிக்கல்வி: நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை அரசு உணர வேண்டும்..!
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும்பாலான பானி பூரி விற்பனையாளர்கள் முகமூடி அணியும் விதியை நகரில் பின்பற்றவில்லை. மேலும் விற்பனையாளர்களில் பலர் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் போது கையுறைகளைப் பயன்படுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த அதிரடி உத்தரவு குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்., "மக்கள் பானி பூரி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் ஒருவேளை பானி பூரி சாப்பிட விரும்பினால், அவர்கள் மூலப்பொருளை வாங்கி வீட்டிலேயே தயாரித்து உண்ணலாம். கொரோனாவை தடுக்க இதுவும் ஒரு பாதுகாப்பான வழி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் -19: பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் தொலைபேசியில் பேச்சு...
உத்தரபிரதேசத்தில் பெரிதும் கொரோனா பாதிப்புக்குள்ளான 11 மாவட்டங்களில் கான்பூர் ஒன்றாகும், அங்கு அதிகரித்து வரும் நேர்மறை வழக்குகள் மக்களின் கவலையினை தூண்டியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த உத்தரவு மக்களுக்கு சற்று ஆறுதலாய் அமையும் என எதிர்பார்க்கலாம்.