இந்தியாவில் கொரோனா வைரசால் (Corona Virus) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இப்போது குற்றவாளிகள் கூட COVID-19 நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கின்றனர்! ஆம், இது நிஜம்தான்!! அவர்கள் கைது மற்றும் சிறைக்கு அஞ்சாமல் இருக்கலாம், ஆனால் COVID-19 தொற்றுநோய்க்கு அவர்களும் அஞ்சத்தான் செய்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரப் பிரதேசத்தில் (Uttar Pradesh) சமீபத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் இதை நிரூபித்துள்ளது. இந்த சம்பவத்தின் காட்சி ஒரு திரைப்படக் காட்சி போல் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. உத்தரபிரதேசத்தின் அலிகரில் (Aligarh) முகக்கவசம் அணிந்த இருவர், மிகவும் இயல்பாக ஒரு கடைக்குள் நுழைந்து, கைகளைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, பின்னர் கடையை கொள்ளையடித்தனர்!


ஆமாம், இந்த வினோதமான சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது.


கொரோனா தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்து ஒரு நகைக் கடைக்கு (Jewellery Store) வந்த நபர்கள், தங்கள் கைகளை சுத்தப்படுத்திய பின்னர், கடை ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளைக் காட்டி, உடனடியாக தங்கள் பைகளில் கடையில் இருந்த நகைகளை போடக் கூறி வற்புறுத்தினர். சில நிமிடங்களில், கொள்ளையர்கள் பட்டப் பகலில் இந்த திருட்டை நடத்த, அங்கிருந்த கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அச்சத்தில் அசையாமல் அமர்ந்தனர்.


பத்திரிகையாளர் அலோக் பாண்டே இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். ”அலிகரில், மூன்று பேர் ‘முழு கோவிட் நெறிமுறைகளை’ பின்பற்றி நகைக் கடையை கொள்ளையடிக்கிறார்கள் - முகமூடிகளை அணிந்துகொண்டு உள்ளே வந்து, கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு, பின்னர் துப்பாக்கியைக் காட்டி, கடையை கொள்ளையடிக்கிறார்கள்!” என எவர் எழுதியுள்ளார்.


வினோதமான அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:



இந்த வீடியோ வைரலாகி, பல தரப்பு மக்கள் இதற்கு பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் COVID-19 வழிகாட்டுதல்களை மக்கள் அனைத்து நேரங்களிலும் பின்பற்றுகிறார்கள் என்று சிலர் வேடிக்கையாகக் கூறியுள்ளனர். சிலர் மாநிலத்தில் குற்றங்கள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.


இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுப்பதாக அலிகார் போலீசார் (Aligarh Police) உறுதியளித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: Viral: பழங்களை சுத்தம் செய்ய முகமூடியை உபயோகப்படுத்திய பழ வியாபாரி!!