ஜோதிடத்தின் படி, ஒரு நபரின் தலைவிதி கைகளின் ரேகைகளை பொறுத்தது மற்றும் உடலில் உள்ள மச்சங்கள் அவர்களது எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பல விஷயங்களையும் சொல்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக மச்சம் அதிர்ஷ்டமானது என்று கூறப்பட்டாலும், சில மச்சங்கள் தீங்கு விளைவிக்கும் குனாதிசயம் கொண்டது என்றும் ஜோதிடங்கள் கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தீங்கு விளைவிக்கும் மச்சம் எது, நன்மை அளிக்கும் மச்சம் எது என்பது பற்றி இன்று நாம் இந்த பதிவில் பார்ப்போம். 


சுக்குர மேடு மீது மச்சம் - உங்கள் கையின் கட்டைவிரலுக்கு அடியில் உள்ள அந்த இடத்தில் ஒரு மச்சம் இருந்தால், நீங்கள் எதிர்மறையான சிந்தனையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். மேலும் உங்களின் வாழ்க்கை அழகாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்கும் பட்சத்திலும் உங்களால் அவற்றை அனுபவிக்கும் பெற முடியாது என கூறப்படுகிறது.


சந்திர மேடு மீது மச்சம் - சந்திர மேடு எதிர் பக்கத்தில் ஒரு மச்சம் இருந்தால், ஒரு நபரின் திருமணத்தில் அனைத்து வகையான பிரச்சினைகளும் வரும் என்று கூறப்படுகிறது.


குரு மேடு மீது மச்சம் - குரு மேடு கீழ் பகுதியில் ஒரு மச்சம் இருந்தால், அதாவது ஆள்காட்டி விரல் கீழ்பகுதியில் ஒரு மச்சம் இருந்தால், அவரது பெரும்பாலான முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் மீண்டும் மீண்டும் தோல்வியடைகிறார் என சித்தரிக்கப்படுகிறது.



சனி மேடு மீது ஒரு மச்சம் - சனி மேடு மீது ஒரு மச்சம் இருந்தால், அதாவது நடு விரலின் கீழ் பகுதியில் ஒரு மச்சம் இருந்தால் அது நல்லது இல்லை என கருதப்படுகிறது. அதாவது கையில் இந்த இடத்தில் மச்சம் வைத்திருக்கும் பட்சத்தில் அவருக்கு எப்போதும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.


சூர்ய மேடு மீது மச்சம் - சூர்யா மேடு மீது ஒரு மச்சம் இருந்தால் அதாவது மோதிர விரலின் கீழ் பகுதியில் ஒரு மச்சம் இருந்தால், மரியாதை குறைவு என்று கூறப்படுகிறது. அதாவது அவர் செய்யும் காரியல் அனைத்து பலரால் விமர்சிக்கும் வகையிலேயே இருக்குமென கூறப்படுகிறது.