‘இந்த’ 5 ராசிக்காரர்களை அனைவருக்கும் பிடிக்குமாம்..! யார் அவர்கள்..?
Attractive Zodiac Signs: சில ராசி கொண்டுள்ளவர்களை மட்டும் அனைவருக்கும் பிடிக்குமாம். யார் அவர்கள்?
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான குணாதிசயம் இருக்கும். இருக்கும் 12 ராசிகளுள், குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்தவர்களால் மட்டும் ஒரு சிலர் சிரமமேயின்றி ஈர்க்கப்படுவர். இவர்கள் எங்கு சென்றாலும், யாருடன் பழகினாலும் தன்னைப்பற்றிய ஏதேனும் நல்ல அபிப்ராயத்தை அவர்களின் மனங்களில் விதைத்து விட்டுதான் வருவார்கள். அழகு, அறிவு, இவர்கள் நடந்து கொள்ளும் விதம் என இவர்களிடம் இருக்கும் எல்லா பன்புகளும் பலரையும் பெரிதாக் ஈர்க்கும்.
1.சிம்ம ராசி:
சிங்கத்தை குறிக்கும் ராசியை உடையை சிம்ம ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே காண்போர் அனைவரையும் கவரும் ஆற்றல் இருக்கும். இவர்கள் எங்கு சென்றாலும், இவர்களுக்கு பெரிய மரியாதை இருக்கும். இவர்களிடம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரித்து காணப்படும். இந்த ஒரு குணாதிசயத்தாலேயே பலர் இவர்களால் கருதப்படுவர். யார் தன்னை சுற்றி இருந்தாலும், தனக்கான பாதையில் தனக்குரிய பாணியில் தனது இயல்பை மாற்றிக்கொள்ளாமல் இருப்பர். இதுவும் இவர்களின் கவரக்கூடிய திறமைகளுள் ஒன்று. அதனால் சிம்ம ராசியை உடையவரால் பலர் ஈர்க்கப்படுவர்.
2.துலாம் ராசி:
யாருடன் பேசினாலும், எத்தனை பேருடன் பழகினாலும் அவர்களுக்கென்று தனித்துவமாக மரியாதை கொடுப்பவர்கள், துலாம் ராசிக்காரர்கள். தன்னுடன் இருப்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தும் இவர்களின் குணம் பலரையும் கவரக்கூடியது. பிறரின் உணர்வுகளை தன்னுடன் தொடர்பு படுத்திக்கொள்ள கூடிய திறன் இவர்களிடம் உள்ளது. இவர்கள், நன்கு பேசும் திறமை உடையவர்களாக விளங்குவதால் இவர்கள் இருக்கும் இடங்களில் பிரச்சனை வந்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு தெரியும்.
மேலும் படிக்க | PCOD இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..? பிக்பாஸ் லாஸ்லியா கூறும் ஈசி டிப்ஸ் இதோ !
3.தனுசு ராசி:
இயல்பாகவே சாகச விரும்பிகளாக இருப்பவர்கள், தனுசு ராசியை சேர்ந்தவர்கள். இவர்கள், வாழ்வில் எது நடந்தாலும் அதை தனக்கு நல்ல விதத்தில் நம்பிக்கை அளிக்கும் விஷயமாகவே பார்ப்பார்கள். இது, இவரை சுற்றி இருப்பவர்களுக்கு பிடித்த விஷயமாக கருதப்படும். இவர்களின் இந்த சாகச குணாதிசயம் இவர்களை பயமற்றவர்களாக மாற்றும். அதனால், பல்ர் இவர்களால் ஈர்க்கப்படுவர். இவர்களின் அறிவுக்கூர்மையும் பலரை ஈர்க்கவல்லது.
4.விருச்சிக ராசி:
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுகு இயல்பாகவே பலரை காந்தம் போல ஈர்க்கும் சக்தி இருக்கும். இவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது தொழிலிலும் மிகவும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். அதே சமயத்தில் இவர்களிடம் பழகுபவர்களுக்கே இவர்கள் ஏதோ மர்மத்துடன் இருப்பது போல தோன்றும். பலருக்கு விருச்சிக ராசி உடையோரால் ஈர்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். பிறர் என்ன சொன்னாலும் தன் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதன் படி முடிவெடுத்து வெற்றி பெறுபவர்கள் இவர்கள். இதுவும் பலரை இவர்களிடம் ஈர்க்கும். இவர்களின் பயமற்ற குணாதிசயத்தை கண்டு பலர் அசந்து போவர்.
5.கும்ப ராசி:
கும்ப ராசிக்காரர்கள் அனைவருடனும் பழகி விடும் இயல்பான குணாதிசயம் பொருந்தியவர்களாக இருப்பர். இந்த உலகை மாற்ற வேண்டும் என்று சிந்திக்ப்பவர்களுள் கும்ப ராசிக்காரர்களும் ஒருவர். ஓவ்வொரு விஷயத்திலும் இவர்கள் வித்தியாசமாக யோசிக்கும் திறன் பலரை வியப்பில் ஆழ்த்தும். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இல்லாமல் எப்போதும் தனித்துவமான சிந்தனைகள் கொண்டவர்களாக இருக்கும் இவர்களை பலரும் பின் தொடருவர், ஈர்க்கப்படுவர்.
மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு பொறுப்பே இருக்காது..! யார் அவர்கள்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ