‘இந்த’ 5 ராசிக்காரர்களால் பொய்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்..!
ஒரு சில ராசிக்காரர்களால் பிறர் பொய் கூறுவதை எளிதில் கண்டுகொள்ள முடியும். யார் அவர்கள்..?
ஒருவரிடம் பொய் கூறுவது, சிலருக்கு எளிததான பழக்கமாக இருக்கும். ஆனால் ஒரு சிலர், ஒருவர் பொய் கூறுகிறார் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவர். இவர்களுக்கு "ஸ்பைடி-சென்ஸ்" கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். சொல்லப்போனால் இவர்கள் ஒரு நடமாடும் Lie Detector ஆக இருப்பர். அதிலும் ஒரு சில ராசிக்காரர்கள் பலரையும் அப்படியே புத்தகமாக படிப்பவராக இருப்பர். இவர்களால் பொய் எது உண்மை எது என்பதை எளிதில் பார்க்க முடியும். அந்த அளவிற்கு இவர்களுக்கு வலுவான உள்ளுணர்வு ஆளுமைகள் இருக்கும். இதில் உள்ள ராசிக்காரர்களிடம் பொய் கூறும் முன், கொஞ்சம் உஷாராகவே இருங்கள்.
1.விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் தன்னை சுற்றி நடப்பதில் எதில் உண்மை இருக்கிறது எதில் பொய் இருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவர். இவர்கள், மக்களின் உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் படிக்கும் இயல்பான திறனை கொண்டுள்ளவர்களாக இருப்பர். மற்றவர்கள், அவர்களை ஏமாற்றுவது கடினம். யாராவது தன்னிடம் நேர்மையாக நடந்து கொள்ளாவிடில் இவர்களால் உணர முடியும். மேலும், இந்த ராசி உடையோர் தங்களது உள்ளுணர்வை நம்புகிறவர்களாக இருப்பர். பொய்யுடன் தன்னிடம் வந்து இனிக்க இனிக்க பேசுபவர்களை இவகள் நம்ப மாட்டார்கள். அவர்களின் ஆழ்ந்த புலனாய்வுத் திறன்கள் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொணரவும், பொய்களை அம்பலப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும் படிக்க | மலிவு விலையில் தங்கம் வாங்க வாய்ப்பு.... தங்கப்பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்!
2.மீனம்:
மீன ராசி உடையோர் உணர்திறன் கொண்டவர்களாக இருப்பர். இவர்களால் பிறருடம் உணர்ச்சிகள் மூலம் இணைய முடியும். இதனால் தன்னுடன் பழகாதவர்கள் உண்மையைச் சொல்லாதபோது அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த ராசிக்காரர்கள் உடல் மொழி, குரலின் தொனி மற்றும் முகபாவங்கள் ஆகியவற்றில் உள்ள நுட்பமான குறிப்புகளையும் கவனிப்பர். அவர்களின் ஆழ்ந்த உள்ளுணர்வு பொய்களைப் எளிதாக கண்டுபிடிக்க உதவும். அது மட்டுமன்றி, அந்த பொய்களுக்கு பின்னால் உள்ள காரணங்களையும் இவர்கள் புரிந்து கொள்வர்.
3.கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் விவரம் மற்றும் பகுப்பாய்வு மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கும் உணர்வைக் கொண்டுள்ளனர். மேலும், ஒருவர் கூறும் விஷயங்களில் உள்ள முரண்பாடுகளயும் விரைவாக கவனிக்கிறார்கள். இந்த ராசிக்கரர்களுக்கு நினைவுத்திறன் கொஞ்சம் அதிகமாகவே இருக்குமாம். ஆதலால், தன்னிடம் பொய் கூறியவர்கள் என்ன கூறினார்கள், இப்போது என்ன கூறுகிறார்கள் என்பதை ஒன்றாக இணைக்க முடியும். இவர்கள் உண்மைகளையும் ஆதாரங்களையும் ஆராய்கிறார்கள், எனவே அவர்களிடம் பொய் சொல்வதில் அர்த்தமில்லை.
4.மகரம்:
மகர ராசிக்காரர்கள் ஒரு வலுவான பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களை முட்டாள்தனமான அணுகுமுறைகளாலும் ஏமாற்றும் நடத்தையால் எளிதில் நம்ப வைத்துவிட முடியாது. அவர்கள் நேர்மையானவர்களையும் நேர்மையையும் மதிப்பவர்களாக இருப்பர். அப்படியே நடந்து கொள்ளவும் செய்வர். பிறரிடம் இருந்தும் இவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். அவர்கள் ஒரு தெளிவான பகுத்தறிவு மனநிலையுடன் சூழ்நிலைகளை மதிப்பிடுவர், எனவே அவர்கள் பொய்களையும் அதற்கு பின்னால் இருக்கும் தந்திரங்களையும் கண்டறிய முடியும். ஒருவரின் நேர்மையை மதிப்பிடும்போது அவர்கள் தங்கள் உள்ளுணர்வை சார்ந்தே எந்த முடிவையும் எடுப்பர்.
5.துலாம்:
துலாம் ராசிக்கரர்கள், நீதி மற்றும் நியாயம் பற்றிய வலுவான உணர்வினை கொண்டிருப்பர். அவர்கள் ஒரு சூழ்நிலையின் இரு பக்கங்களையும் பார்க்கும் இயல்பான திறமையைக் கொண்டுள்ளனர், எனவே இவர்களால் பொய்களை எளிதில் கட்டவிழ்க்க முடிகிறது. தன்னை யாராவது ஏமாற்ற முயற்சித்தால் அதை சட்டென கண்டுபிடிக்கும் திறனும் இவர்களுக்கு உண்டு.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ