மார்ச் மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்! துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!

2023, மார்ச் மாதம் 13 முதல் 19  வரையிலான வாரபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2023, 07:40 PM IST
  • வேலையில், தொழில் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி வரும்.
  • அதிகப்படியான கோபம், வீண் விவாதங்களில் நேரத்தை வீணடிக்கும் வாய்ப்பு.
  • புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மார்ச் மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்!  துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்! title=

2023, மார்ச் மாதம் 13 முதல் 19  வரையிலான வாரபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.

மேஷம் வார ராசிபலன்

மேஷம் - இந்த வாரம் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். வேலையில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பொருளாதார திட்டம் தீட்டப்படும். சுற்றுலா சென்று, உங்கள் காதலருடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்

ரிஷபம் வார ராசிபலன்

ரிஷபம் - குடும்பத்தில் நிலவும் பதட்டமான சூழல் இந்த நேரத்தில் நீங்கும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும், உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் வேலைதிறன் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார். காதல்-உறவு எதிர்காலத்தில் திருமணத்தில் இணைக்கப்படலாம்.

மிதுனம் வார ராசிபலன்

மிதுனம் - வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய திட்டம் தீட்டப்படும், வருமான ஆதாரம் பெருகும், எதிரிகளை வெற்றி கொண்டு, புகழ், கௌரவம் கிடைக்கும். மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பரஸ்பர உறவுகளில் பிணைப்பு அதிகரிக்கும். குடும்பச் சொத்து சம்பந்தமாக ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், பரஸ்பர நல்லிணக்கத்துடன் அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

கடகம் வார ராசிபலன்

கடகம் - பண வரவின் காரணமாக நிதி பிரச்சனையை தீர்க்க முடியும். புதிய காதல் உறவுக்கு நேரம் சாதகமானது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பப் பொறுப்புகளை கவனிப்பீர்கள். பணியில் இருப்பவர்கள் வருமான உயர்வை பெறுவார்கள்

சிம்மம் வார ராசிபலன்

சிம்மம் ராசி- வேலையில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை நீங்கி, மீண்டும் வேகம் எடுக்கும். காதல் வாழ்க்கையில் சில மாற்றங்கள் இருக்கும், இரகசிய எதிரிகளின் சதி தோல்வியடையும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும்.

கன்னி வார ராசிபலன்

கன்னி - நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால், வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் உறவுகளைப் பேணுவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் இது ஒரு நல்ல நேரம். எனினும், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

துலாம் வார ராசிபலன்

துலாம் - உத்தியோகத்தில் மேலதிகாரி  உங்கள் வேலை திறனால், மகிழ்ச்சியாக இருப்பார். வியாபாரத்தில் புதிய திட்டம் தொடங்கலாம். புதுமணத் தம்பதிகள் மனதிற்கு பிடித்தமான இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு நேரம் மிகவும் நல்லது. புதிய ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

விருச்சிகம் வார ராசிபலன்

விருச்சிகம் - தேர்வு - போட்டித் துறையில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வருமானம் கிடைக்கும். நீண்ட காலம் முதலீடு செய்வது எதிர்காலத்தில் பல நன்மைகளைத் தரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும்.

தனுசு வார ராசிபலன்

தனுசு - இந்த வாரம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். காதல் உறவில் தவறான புரிதல்கள் ஏற்படும். சிறு சிறு விஷயங்களுக்காக சச்சரவுகள், மன உளைச்சல்கள் ஏற்படும். நிதி பரிவர்த்தனை விஷயத்தில் முழு கவனம் செலுத்தவும். புதிய வேலை அல்லது புதிய முதலீடுகளை இப்போது செய்ய வேண்டாம்.

மகரம் வார ராசிபலன்

மகரம் - வியாபாரத்தில் நீண்ட கால லாபத்தைத் திட்டமிடலாம். மாணவர்கள் திருப்திகரமான தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான கோபம், வீண் விவாதங்களில் நேரத்தை வீணடிக்கும் வாய்ப்பு. குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளால் உங்கள் மனம் குழப்பமடையலாம்.

கும்பம் வார ராசிபலன்

கும்பம் - வேலையில், தொழில் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி வரும். இந்த வாரம் உங்கள் துணையுடன் எங்காவது செல்லும் திட்டம் இருக்கும். மன அமைதி பெறுவீர்கள். குடும்பத்தினர் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.

மீனம் வார ராசிபலன்

மீனம் - திருப்திகரமான பொருளாதார பலன்கள் இருக்கும். படைப்புத் துறையில் தொடர்புடைய இளைஞர்கள் முன்னேற நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் மற்றும் காதலுக்கு நேரம் நல்லது. பொருளாதார நிலை மேம்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நடமாட்டத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News