காதல்-காமம் போன்ற உணர்ச்சிகள் நம் மனங்களில் ஏற்படும் சாதாரண மாற்றங்களில் ஒன்றாகும். ஆனால், இதில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு என்ன செய்தாலும் அந்த காதல் உணர்வை தொடவே முடியாதாம். யாருப்பா அந்த முரட்டுத்தனமான முரட்டு சிங்கிள்ஸ்..?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.கும்பம்:


கும்ப ராசிக்காரர்கள் மிகவும் அறிவுப்பூர்வமாக இருப்பார்களாம். ஏதாவது ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் இவர்கள் மனதின் பேச்சை விட மூளை சொல்வதைத்தான் கேட்பார்களாம். ‘கல்லுக்கும் ஈரம்’ என்பது போல இவர்களுக்குள் காதல் ஒளிந்திருந்தாலும் இவர்ள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக கூறுவதற்கு கூச்சப்படுவர். அதனால் இவர்களுக்கு அதிக நேரம் காதல் கை கூடாமலேயே போய் விடும். இவ்வாறு இவர்கள் செய்வதனால், இவர்களின் பார்ட்னர்களும் இவர்களுக்கு ‘காதலே வராது போல..’ என நினைத்துக்கொண்டு விலகி விடுவராம். அதனால் கும்ப ராசி நேயர்களே, ‘பேசிப்பழகுங்க பாஸ்..’


மேலும் படிக்க | இறந்தவர்களின் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்தால் உங்களுக்கு சிறை தான்!


2.கன்னி:


கன்னி ராசிக்காரர்களில் ஒரு சிலர்தான் காதல் மன்னன்/மன்னியாக இருப்பார்கள். பலர் காதல் வராமல் மனதிர்குள் புழுங்குவர். இவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக ஆராயும் திறன் கொண்டவர்களாக இருப்பர். அதனால் இவர்களுக்கு ஒருவரை பிடித்திருந்தாலும் அவர்களுடையை நிறைகளை கண்டுபிடிப்பது போல குறைகளையும் எளிதில் கண்டுபிடித்துவிடுவர். இதனால், இவர்களால் எளிதில் காதலில் விழுந்துவிட முடியாது. ரிலேஷன்ஷிப் என்று வந்து விட்டாலே தெரித்து ஓடும் கூட்டத்தில் இவர்களும் இருப்பார்கள். எதை செய்தாலும் ப்ளான் பண்ணி செய்வார்கள். இது, சமயங்களில் அவர்களின் காதலன்/காதலியை எரிச்சலூட்டும். கன்னி ராசிகாரர்களுக்கு காதல் அமைய வேண்டும் என்றால் பெரிதும் யோசிக்காமல் இருக்க வேண்டுமாம். 


3. மகரம்:


மகர ராசிக்காரர்கள், தங்கள் லட்சியத்தை நோக்கி பயணம் செய்பவர்களாக இருப்பர். இவர்களுக்கு காதல் உணர்வுகளை விட எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருக்குமாம். அதிகம் வேலை பார்த்து மேன்மையான இடத்திற்கு வர வேண்டும் என்று தீரா ஆசை கொண்டுள்ளவர்கள் இவர்கள். இந்த ராசிக்காரர்கள் சமயங்களில் தங்கள் காதல் உறவை விட வேலை அல்லது தொழிலை முதன்மை படுத்துபவர்களாக இருப்பர். இவர்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகவும் கடினமான விஷயமாக தோன்றும். இதனால் இவர்களால் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போய் விடும். அதனால் இவர்கள் கொஞ்சம் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு காதலன்-காதலிக்காக நேரம் ஒதுக்க வேண்டும். 


4.விருச்சிகம்:


விருச்சிக ராசி உடையோர், எதை எடுத்தாலும் கொஞ்சம் தீவிரமாக யோசித்து செயல் படுபவர்கள். காதல் உணர்வு என்று வந்துவிட்டாலும் அவர்கள் இப்படித்தான், அந்த விஷயத்தை தீவிரமாக யோசித்தே நேரத்தை கடத்திவிடுவர். இவர்களுக்கு யாருடனாவது உணர்வு ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே பயமாக இருக்கும். இதுவும் இவர்களுக்கு காதல் அமையாததற்கு ஒரு காரணம். இவர்களில் சிலர் தங்கள் விஷயங்களை ரகசியம் போல பொத்தி பாதுகாப்பர். அதனால், இவர்களை யாராலும் எளிதில் அணுக முடியாது. 


5. மிதுனம்:


பல டாஸ்குகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய சக்தி உடைய ராசிக்காரர்கள், மிதுன ராசிக்காரர்கள். இவர்களின் இந்த சுபாவமே இவர்களுக்கு காதல் வராமல் செய்துவிடும். இந்த ராசி உடைய பலர், ஒருவருக்காக மட்டும் தங்கள் காதல் உணர்வுகளை வைத்திருக்க மாட்டார்கள். இதனால், பெரும்பாலான சமயங்களில் பலருடன் பழகுவதையே இவர்கள் நிறுத்திவிடுவர். காதல் என்பதே இவர்களுக்கு எளிதில் சலிப்பு தட்டும் விஷயமாக மாறிவிடுமாம். 


மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு காதல் மழை பொழியப்போகிறது..! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ