பிசிஓடி பிரச்சனைக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்..!
பிசிஓடி எனப்படும் கர்ப்பப்பை பிரச்சனை இருப்பவர்கள் சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்
பிசிஓடி என்பது மரபணு குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சனை. இது ஒரு நோயல்ல. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது நம் கைகளில் தான் உள்ளது. அதற்கு முன்பாக பெண்கள் பிசிஓடி பிரச்சனை குறித்த தெளிவை பெற்றிருக்க வேண்டும். அதனால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறைகளை கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினமும் நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வதுடன், அதனை முறையாக செய்து வர வேண்டும். நாள்தோறும் 40 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவற்றைத் தவிர மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரகளை சாப்பிட வேண்டும். பொதுவாக ஆங்கில மருத்துவத்தில் தீர்வை தேடுவதைப்போலவே இயற்கையான வழிமுறைகளிலும் இதற்கான தீர்வை எட்ட முடியும்.
மேலும் படிக்க | உலக கிட்னி தினம்: சிறுநீரகத்தை பாதிக்கும் ‘5’ ஆபத்தான பழக்கங்கள்..!!
சாப்பிட வேண்டிய உணவுகள்
பீன்ஸ், தக்காளி, வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான், கோவக்காய் ப்ராக்கோலி போன்ற அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் அனைத்து வகையான கீரைகளை அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பப்பாளி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம்.
பாதாம், பேரீச்சம்பழம், அக்ரூட் மற்றும் முளைக்கட்டிய பயறு, பருப்பு வகைகள், தயிர், நீர் மோர் ஆகியவற்றை சாப்பிடலாம். இவைதவிர, மீன் வாரத்தில் இரண்டு நாட்களும், தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.
சாப்பிடக்கூடாத உணவுகள்
சர்க்கரை, பிரெட், மைதா, ரீஃபைன்ட் ஓட்ஸ் மற்றும் ரீஃபைன்ட் கோதுமை, கொழுப்புள்ள பால், தயிர், சீஸ் மற்றும் வெண்ணெய், மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், பச்சை வாழைப்பழம், கிழங்கு வகைகள், முந்திரி, திராட்சை, பிஸ்தா பாக்கெட் பழ ஜூஸ், அனைத்து வகை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பேக்கரி உணவுகள் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
மேலும் படிக்க | சிறுநீரக நோய் உங்கள் கண்களை பாதிக்கலாம், எப்படி தடுப்பது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR