தீபாவளி அன்று ‘இவர்கள்’ உஷாரா இருக்கனும்! இல்லைன்னா பிரச்சனை..
தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இந்த நாளில் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருந்தாலும் யார் யாரெல்லாம் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் தெரியுமா?
பண்டிகை தினம் என்றாலே, அனைவருக்கும் குஷியில் ரெக்கை கட்டி பறப்பது போல இருக்கும். அதுவும் தீபாவளி என்றால் கேட்கவா வேண்டும்? இந்த 2024ஆம் வருடத்திற்கான தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 31) காெண்டாடப்படுகிறது. இந்த நாளில், இனிப்புகளை சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து மகிழ்வாேம். என்னதான் கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருந்தாலும் ஒரு சிலர் இந்த நாளில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். அப்படி இல்லை என்றால் அடுத்த சில நாட்கள் பிரச்சனைதான். அப்படி உஷாராக இருக்க வேண்டியது யார் யார் தெரியுமா?
குழந்தைகள்:
பண்டிகை காலங்கள், குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது என்றே கூறலாம். இந்த நாளில், குழந்தைகளை பட்டாசு வெடிக்க செய்யலாம். ஆனால், பெரியவர்கள் யாராவது கூடவே இருந்து அவர்களுக்கு பட்டாசை வெடிக்க சொல்லித்தர வேண்டும். ஆட்டோ பாம், ராக்கெட், பிஜிலி வெடி போன்றவை ஆபத்தானவை. இவற்றை குழந்தைகள் அருகே வெடிக்கக்கூடாது. அவர்கள் நெருப்புடன் விளையாடும் (பட்டாசு வெடிக்கும்) போது கண்டிப்பாக பெரியவர்கள் கூடவே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கும் பிரச்சனை, சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனை.
வயதானவர்கள்:
வயது முதிர்ந்தவர்கள், தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் இடங்களில் இருந்து தள்ளியே இருப்பது மிகவும் அவசியம் ஆகும். இவர்கள், புகை மற்றும் அதிக சத்தத்தால் பாதிக்கப்படலாம். இவர்களில் சிலருக்கு இதய நோய், ரத்தக்கொதிப்பு ஆகிய பாதிப்புகளும் இருக்கும். எனவே, இவர்கள் மிகவும் பத்திரமாக இருப்பது அவசியம் ஆகும்.
விலங்குகள்:
திருச்சியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தீபாவளியே கொண்டாட மாட்டார்கள். ஏன் தெரியுமா? அங்கு இருக்கும் மரங்களில் அதிகப்படியான வவ்வால்கள் வாழ்கின்றன. இவற்றின் அமைதியை கெடுக்கக்கூடாதனெ அவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவதில்லை. ஆனால், இந்த அக்கறையில் பாதி அளவு கூட நம்மில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. வேண்டுமென்றே நாய், பூணை இருக்கும் இத்தில் பட்டாசு வெடித்து, அவற்றை பயந்து ஓட வைக்கிறோம். உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால், அவை தீபாவளி சமயத்தில் கண்டிப்பாக பயப்பட நேரிடும். அவற்றை, வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பது நல்லது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு எந்த மாதிரி ப்ளவுஸ் தைக்கலாம்? ராஷி கண்ணா கொடுக்கும் ஐடியாக்கள்..
சுவாசக்கோளாறு இருப்பவர்கள்:
பலருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பிற சுவாசக்கோளாறுகள் இருக்கலாம். அவர்களின் நிலை, தீபாவளி பட்டாசு புகையை நுகர்ந்தால் மேலும் மோசமாகலாம். எனவே, அவர்கள் கண்டிப்பாக வீட்டிற்குள்ளேயே இருப்பதும், வெளியில் வரும் போது மாஸ்க் அணிந்து வருவதும் அவசியம் ஆகும்.
சத்தத்திற்கு பயந்தவர்கள்:
ஒரு சிலருக்கு, பிறர் கத்தி பேசினாலும் மனதிற்குள் பயமாக இருக்கும். அப்படி பயப்படுபவர்களுக்கு உணர்த்திறன் அதிகமாக இருக்கும். எனவே, அதிக சத்தத்தை விரும்பாதவர்கள், மிகவும் அதிக வெளிச்சத்தை விரும்பாதவர்களுக்கு தீபாவளி நாளன்று கொஞ்சம் கடினமாக இருக்கும். முடிந்தளவு அவர்களும் வீட்டில் இருப்பது நல்லது.
சாலையை உபயோகிப்பவர்கள்:
வண்டியில் செல்பவர்கள், சாலையில் செல்லும் போது பார்த்து செல்ல வேண்டும். அந்த சமயத்தில் யார் எந்த இடத்தில் இருந்து வந்து பட்டாசு வெடிப்பார்கள் என்றே கூற முடியாது. எனவே, பெரும்பாலும் நடந்து செல்லுங்கள். அப்போது திடீரென்று காலுக்கு அடியில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கலாம்.
மேலும் படிக்க | தீபாவளி கிஃப்ட் ஐடியாக்கள்! பட்ஜெட்டுக்குள் வரும் 5 நல்ல பரிசுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ