தீபாவளிக்கு எந்த மாதிரி ப்ளவுஸ் தைக்கலாம்? ராஷி கண்ணா கொடுக்கும் ஐடியாக்கள்..

Diwali 2024 Blouse Designs : வரும் தீபாவளிக்கு புடவைக்கட்ட பலர் ப்ளான் போட்டிருப்பர். அவர்கள், எந்த டிசைனை ப்ளவுஸில் வைக்கலாம்? இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Oct 27, 2024, 07:01 PM IST
  • தீபாவளி 2024 ப்ளவுஸ் டிசைன்ஸ்
  • சூப்பரான டிசைன்ஸ்
  • அனைத்தையும் இங்க பாருங்க..
தீபாவளிக்கு எந்த மாதிரி ப்ளவுஸ் தைக்கலாம்? ராஷி கண்ணா கொடுக்கும் ஐடியாக்கள்.. title=

Diwali 2024 Blouse Designs : 2024ஆம் ஆண்டின் தீபாவளி நெருங்கி விட்டது. இந்த நாளில், என்னென்ன டிரெஸ் எடுக்கலாம், எந்த மாதிரி ஆடை உடுத்தலாம், எங்கெல்லாம் வெளியில் சுற்றலாம் என்பது குறித்து இப்போதே பலர் ப்ளான் போட்டு வைத்திருப்பர். அப்படி நீங்கள் எந்த பிளானும் போடவில்லை என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. பல நடிகைகள், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பல்வேறு டிசைன் பொருந்திய உடைகளை அணிந்து பதிவிட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஐடியாக்களை சுட்டுக்கொள்ளலாம். 

ராஷி கண்ணா..

தமிழ் திரையுலகில் பிரபலமான நாயகியாக விளங்குபவர், நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து அடங்க மறு, அய்யோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்திருந்த அரண்மனை 4 படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால் தென்னிந்தியாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். ஸ்டைலாகவும், அழகாகவும், அம்சமாகவும் ஆடை உடுத்தும் நாயகிகளுள் இவரும் ஒருவர். தீபாவளிக்கு இவர் ஸ்டைலில் சில ஆடைகளை உடுத்தலாம். அவை குறித்து இங்கு பார்ப்போம் வாங்க. 

எம்ராய்ட்ரி ஸ்லீவ் லெஸ்:

இந்த பண்டிகை காலத்தில் பலரும் ஸ்லீவ் இல்லாத ப்ளவுஸ்களை அணிவர். அப்படிப்பட்ட ஆடையை நீங்கள், எம்ராய்ட்ரியுடன் சேர்த்து அணியலாம். தனித்துவமான u-cut டிசைன் நிறைந்த ரவிக்கையை இப்போதே உங்கள் டெய்லரிடம் அளவுக்கு கொடுத்து விடுங்கள். இவை பார்ப்பதற்கு ட்ரெண்டியாகவும், அதே சமயத்தில் பண்டிகைக்கு ஏற்ற ஆடையாகவும் இருக்கும். 

ஸ்ட்ராப் ப்ளவுஸ்:

ராஷி கண்ணாவிற்கு மிகவும் பொறுந்தும் ஆடைகளுள் ஒன்று, பெரிய ஸ்ட்ராப் இருக்கும் ப்ளவுஸ். உடுத்துவதற்கும் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும் அந்த ப்ளவுஸை, ஏதேனும் நல்ல கண்களை பறிக்கும் கலரில் தேர்வு செய்து அணியலாம். 

முழு ஸ்லீவ் இருக்கும் ப்ளவுஸ்:

கைகளில் ட்ரான்ஸ்பரெண்ட் ஸ்லீவ்ஸ் கொண்டு, எம்ராய்ட்ரி உடனான ப்ளவுஸ்களை அணியலாம். கருப்பு அல்லது சிகப்பு நிற புடவைக்கு இதனை அணிந்தால் சரியாக இருக்கும். பண்டிகைக்கு ஏற்றார் போல பளிச்சென தோன்ற உதவும் ரவிக்கைகளுள் இதுவும் ஒன்று. 

மேலும் படிக்க | தன்னம்பிக்கையை வளர்க்க..விஜய்யிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!

மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News