சனியால் இந்த ராசிக்காரர்களுக்கு 141 நாட்கள் சோதனையான காலமாக இருக்கும்: ஜாக்கிரதை
Sun Transit: சனியின் இந்த தலைகீழ் நகர்வு பல ராசிகளை பாதிக்கும். குறிப்பாக ஜென்ம சனி மற்றும் பாத சனி உள்ள ராசிகளுக்கு இந்த இயக்கத்தின் அதிகப்படியான தாக்கம் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் வாசம் செய்கிறார். இதில், அவர் சில மாதங்களுக்கு பின்னோக்கியும் நகர்கிறார். தற்போது சனி பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 29 ஆம் தேதி இவரது ராசி மாற்றம் ஏற்படும். ஜூன் 5 ஆம் தேதி இவரது தலைகீழ் இயக்கம் துவங்கும்.
அதன் பிறகு, சனி 141 நாட்கள் தலைகீழான இயக்கத்தில் இருப்பார். அக்டோபர் 23 ஆம் தேதி வழக்கமான இயக்கத்திற்கு மாறுவார். சனியின் இந்த தலைகீழ் நகர்வு பல ராசிகளை பாதிக்கும். குறிப்பாக ஜென்ம சனி மற்றும் பாத சனி உள்ள ராசிகளுக்கு இந்த இயக்கத்தின் அதிகப்படியான தாக்கம் இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கடக ராசி: ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவானின் தலைகீழ் இயக்கத்தின் இந்த காலம் பிரச்சனைகளின் காலமாக இருக்கும். இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் ஈடுபடும் பல வேலைகள் கெட்டுப்போகலாம். பொருளாதார நிலையிலும் மாற்றம் ஏற்படலாம். வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க | இந்த 6 ராசிக்காரர்களின் வாழ்க்கை ஒளிமயமாக்குவார் சனி பகவான்
விருச்சிக ராசி: சனியின் தலைகீழ் இயக்க காலம், விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இக்கட்டான காலமாக இருக்கும். இந்த நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் துன்பம் அதிகரிக்கக்கூடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி எப்போதெல்லாம் தலைகீழ் இயக்கதில் உள்ளதோ, அப்போதெல்லாம் ஜென்ம சனியால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்கள் அதிகரிக்கும். எனவே, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எதிரிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடும். பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மகரம்: சனி சஞ்சரிக்கும் நேரத்தில், மகர ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் கூடும். அதன் தாக்கத்தை மகர ராசிக்காரர்கள் தொழிலில் காணலாம். உத்தியோகத்தில் தடைகள் வரக்கூடும். முதலாளியுடனான உறவுகள் மோசமடையக்கூடும்.
இந்த நேரத்தில், மகர ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், பண பரிவர்த்தனையிலும் இந்த மக்கள் கவனமாக இருக்க வெண்டும்.
கும்பம்: ஏப்ரல் 29 முதல் சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவார். இதற்குப் பிறகு, இந்த ராசியில் சனி பகவானின் தலைகீழ் இயக்கமும் இருக்கும். அதனால், இந்த ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த கால கட்டத்தில். எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இல்லையெனில் நீங்கள் சில பெரிய பிரச்சனைகளில் சிக்கலாம்.
கும்ப ராசிக்கார்ரகள் தங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சனியின் இந்த இயக்கத்தின் போது புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவது நல்லது.
மேலும் படிக்க | குருவின் அருளால் இவர்களின் தலைவிதி அடுத்த 27 நாட்களுக்கு ஒளிரும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR