இந்த ராசிக்காரர்கள் கோவத்தை வென்று கூலாக இருப்பார்கள்: இதில் நீங்களும் உண்டா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி நான்கு ராசிக்காரர்கள் கோபத்தை அதிக அளவில் கட்டுப்படுத்துவதில் வல்லவர்கள்.
Cool Zodiac: கோபம் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கம், கோபம் கொள்வது இயற்கை. சிலருக்கு தவறான விஷயங்களை சகித்துக்கொள்ள முடியாது, உடனே கோபம் கொள்வார்கள். தவறான காரியத்தைக் கண்டால் கோபத்தில் சிவந்து விடுவார்கள்.
இதற்கு மாறாக, கோபத்தை அழகாக கட்டுப்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள். ஜோதிடத்தின் படி, மனிதர்கள் பிறப்பிலிருந்தே கோபம் என்னும் கெட்ட பழக்கத்தைப் பெற்று விடுகிறார்கள். கிரகங்களின் தீய பலன்களால் இது நிகழ்கிறது.
ஜோதிடத்தில் எந்த ராசிக்காரர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி நான்கு ராசிக்காரர்கள் (Zodiac Signs) கோபத்தை அதிக அளவில் கட்டுப்படுத்துவதில் வல்லவர்கள்.
மிதுனம் (Gemini)
இந்த ராசிக்காரர்கள் மிகவும் அமைதியான இயல்புடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளால் கோபப்படுபவர்களை உடனே சமாதானப்படுத்துகிறார்கள். பணியிடத்தில் அவர்களின் அமைதியான நடத்தை மற்றவர்களிடமிருந்து அவர்களைப் பிரித்துக் காட்டுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மிதுன (Gemini) ராசிக்காரர்கள் குடும்பப் பிரச்சினைகளால் வருத்தப்படுவார்கள்.
கடகம் (Cancer)
கடகத்தை ஆளும் கிரகம் சந்திரன். கடக ராசிக்காரர்கள் தங்கள் நடத்தையை சந்திரனைப் போல குளிர்ச்சியாக வைத்திருக்க இதுவே காரணம். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்களுக்கு கோப குணம் மிகவும் குறைவு. பல சமயங்களில் இந்த ராசிக்காரர்களின் சுயமரியாதைக்குக் காயம் ஏற்பட்டால் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ALSO READ:தீராத பிரச்சனையா... கை மேல் பலன் கொடுக்கும் ‘5’ புதன் கிழமை பரிகாரங்கள்..!!
கன்னி ராசி (Virgo)
கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். இதன் பலன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஒழுக்கமுடையவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மக்களிடம் பேசுவதில் நிதானத்தைக் கடைப்பிடிப்பார்கள். இதனுடன் இந்த ராசிக்காரர்கள் கோபத்தையும் கட்டுப்படுத்துவார்கள். இந்த நடத்தை காரணமாக, கன்னி (Virgo) ராசிக்காரர்கள் அமைதியான இயல்புடையவர்களாக கருதப்படுகிறார்கள்.
மீனம் (Pisces)
ஜோதிடத்தில், மீனம் நீரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. நீர் அம்சம் காரணமாக, இந்த ராசிக்காரர்களின் இயல்பு முற்றிலும் அமைதியாக இருக்கும். அமைதியான இயல்பு காரணமாக, இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் இதயங்களில் தங்களுக்கென தனி இடத்தைப் பெறுகிறார்கள். ஆனால் மீன ராசிக்காரர்களின் உணர்வுகளுடன் யாராவது விளையாடினால், அதை அவர்கள் விடுவதில்லை.
ALSO READ: டிசம்பரில் வரும் சூரிய கிரகணம் இந்த 5 ராசிகளை பாடாய் படுத்தும்: ஜாக்கிரதை!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR