செவ்வாய்ப் பெயர்ச்சி: இந்த ‘5’ ராசிக்கார்களுக்கு டிசம்பர் 5 வரை எச்சரிக்கை தேவை!

செவ்வாய் பெயர்ச்சி, ஒரு நபரின் திருமண வாழ்க்கை, காதல் விவகாரங்கள் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2021, 02:21 PM IST
செவ்வாய்ப் பெயர்ச்சி:  இந்த ‘5’ ராசிக்கார்களுக்கு டிசம்பர் 5 வரை எச்சரிக்கை தேவை! title=

புதுடெல்லி: ஜோதிடத்தில் செவ்வாய் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது மக்களின் திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை தொடர்பான விவகாரங்களை பாதிக்கிறது. செவ்வாயின் நிலை சரியில்லை என்றால் திருமணத்தில் பல சிரமங்கள் ஏற்படும். மேலும், தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தவிர, செவ்வாய் கிரகம், ஆற்றல், தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றின் அதிபதியாக கருதப்படுகிறது. எனவே, செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியும், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சாதகமான அல்லது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் இந்த செவ்வாய் பெயர்ச்சியில், கீழே குறிப்பிட்டுள்ள ஐந்து ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

செவ்வாய் டிசம்பர் 5 வரை துலாம் ராசியில் இருப்பார்

செவ்வாய், அக்டோபர் 22ம் தேதி இந்த ராசிக்குள் நுழைந்த நிலையில், டிசம்பர் 5 வரை துலாம் ராசியில் இருப்பார். இவர் தார். துலாம் காதல், திருமணம், உறவுகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இந்த ராசிக்கு பலன்கள்  அவ்வளவு சிறப்பானதாக இல்லை. 

ALSO READ | 2022 Rasipalan: இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும்

இந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான நேரம்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் டிசம்பர் 5 வரை உறவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். காதல் உறவு முறிந்தால், கவலைப்பட வேண்டும். அது உங்கள் வருங்கால நலனுக்காக நடந்துள்ளது என்பதால், நிம்மதி அடையவும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் தங்கள் துணை விஷயத்தில் மிகவும் கவனமாகப் பேசுங்கள். ஒரு சிறிய விஷயம் பெரிய பிரச்சினையாக மாறும். இது பல நாட்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: துலாம் ராசியில் இருக்கும் செவ்வாய் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்மறைத் தாக்கத்தை கொண்டுவருவார். துணையுடன் தகராறு ஏற்படலாம். பிரிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படலாம். கவனமாக இரு.

கும்பம்: கும்பம் ராசிக்காரர்கள் பயணம் செல்வீர்கள். ஒருபுறம், உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும், அதே நேரத்தில் வாழ்க்கை துணை இந்த நேரத்தில் கோபமாக இருக்கலாம். சமநிலையில் நடப்பது நல்லது.

மீனம்: மீன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கைக்கும் காதல் வாழ்க்கைக்கும் இந்த நேரம் சரியாக இருக்காது. துணையுடன் தகராறு ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | எண் ஜோதிடம்: இந்த “3” எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News