நல்ல பசங்க காதலிக்கிட்ட இதையெல்லாம் செய்யக்கூடாதாம்! லவ் டிப்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க
உங்கள் காதல் தோற்றுபோகாமல் இருக்க வேண்டும் என்றால், காதலிக்கிட்ட செய்யக்கூடாத விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
காதலில் தோற்றுபோனவர்கள் உடனே தங்களை ஒரு தேவதாஸ்போல நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியெல்லாம் யாரும் நினைக்கத் தேவையில்லை. வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொருவரும் கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, வாழ்க்கை நீரோட்டத்தில் செல்ல தயாராக வேண்டும். அதேநேரத்தில் மிகவும் பிடித்த உங்கள் காதலி உங்களை விட்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சில விஷயங்களை நீங்கள் செய்யக்கூடாது. அது என்ன? என்பதில் நீங்கள் தெளிவாக இருந்துவிட்டால், உங்கள் காதலில் நீங்கள் தான் மாஸ்டர். உங்களுக்கான டிப்ஸ் இதோ...
தோற்றம் குறித்து கமெண்ட்
உங்கள் காதலியை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றால், அவர்களுடைய தோற்றத்தைக் குறித்து ஒருபோதும் நெகட்டிவாக கமெண்ட் அடிக்காதீர்கள். பாசிடிவ் அணுகுமுறை மட்டுமே காதலை அழகாக்கும் என்பதால், எப்போதும் நேர்மறையான வார்த்தைகளில் அவர்களை மகிழ்ச்சிபடுத்த முயற்சி செய்யுங்கள். தோற்றம் குறித்த மோசமான வார்த்தைகள் காதலியின் மனதை புண்படுத்தி, உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கிவிடும்
மேலும் படிக்க | கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
எல்லை மீறாதீர்கள்
இதனை டபுள் மீனிங்காக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே இருக்கும் சில எல்லைகளை மீற வேண்டாம். அதாவது அவர்களின் தனியுரிமையை நீங்கள் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உதாரணமாக அவர்களின் மொபைலை பார்க்க நீங்கள் விரும்பினால், காதலியின் அனுமதி இல்லாமல் எடுக்காதீர்கள். சாட்டிங் உள்ளிட்டவைகளை ஒருவேளை அவர் காட்ட மறுத்தால், விட்டுவிடுங்கள். இங்கு சந்தேகப்பட்டு உறவை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஊக்கப்படுத்துங்கள்
காதலி எப்போதும் உங்களிடம் ஆலோசனைகளை எதிர்பார்ப்பார்கள். அப்போது, அவர்களுக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை செய்ய விரும்பும்போது நெகட்டிவான வார்த்தைகளை கூறி காயப்படுத்த வேண்டாம். மாறாக, அந்த விஷயத்தை நன்றாக செய்ய ஊக்கப்படுத்துங்கள். அதன் முடிவு இப்படி தான் இருக்கும் என நீங்கள் நினைத்தாலும், முந்திரிக்கொட்டையாக வாய்விட்டு சண்டைபோட்டுக் கொள்ளாதீர்கள்.
நிரூபிக்க தேவையில்லை
காதலியிடம் நீங்கள் எவ்வளவு நல்லவர், வல்லவர் என்பதையெல்லாம் வார்த்தைகளால் நிரூபிக்க முற்படாதீர்கள். மாறாக உங்களின் செயல்பாடுகள், வார்த்தைகளிலேயே நீங்கள் யார்? என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டார் என நினைத்து நீங்கள் நிரூபிக்க எடுக்கும் முயற்சி தவறாக செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் இயல்பிலேயே பயணியுங்கள்.
முன்னுரிமை அளித்தல்
காதலி உங்களிடம் எப்போதும் முன்னுரிமை எதிர்பார்ப்பார். அவர் தான் எல்லாமே என நினைக்கும் நேரத்தில் வேறு யாருக்கும் நீங்கள் முன்னுரிமை கொடுத்தால், உறவு நன்றாக இருக்காது. எப்போதும் காதலிக்கு முன்னுரிமை கொடுப்பதையே பிரதான வேலையாக வைத்திருங்கள்.
மேலும் படிக்க | உங்கள் துணையிடம் இந்த விசயத்தை மட்டும் பண்ணிடாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ