ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது.  ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.



ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம்.  பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர்.


பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை கொண்ட உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம்.  வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன.



கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை.  இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான கலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது.


ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது. உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை.  பருத்தி மற்றும் சின்தடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன.


குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது.  மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது.உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.


ALSO READ Lionfish: மனிதன் உயிரை குடிக்கும் விஷம் நிறைந்த ஆபத்தான மீன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR