Covid நோயாளிகளின் சிகிச்சைக்காக புதிய மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்; இந்த மருந்து நோயாளிகளை 24 மணி நேரத்தில் குணமடைவார்கள்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 தொற்று பரவ துவங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது, ஆனால் இதுவரை சரியான மருந்து எதுவும் தயாரிக்கப்படவில்லை. கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) தயாரிப்பதற்கான உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் முழுமூச்சில் செயல்பாடு வருக்கின்றனர். இந்நிலையில், ​​விஞ்ஞானிகள் வெறும் 24 மணி நேரத்தில் கொரோனாவை குணப்படுத்தக்கூடிய (Corona Treatment) ஒரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையில், இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்து கொரோனாவை முற்றிலுமாக அகற்றும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மருந்துக்கு பெயர் MK-4482/EIDD-2801 இது எளிதான மொழியில் மோல்னுபிராவிர் (Molnupiravir) என்றும் அழைக்கப்படுகிறது.


கொரோனாவின் சிகிச்சையில் மோல்னுபிராவிர்க்கு முக்கிய பங்கு 


நேச்சர் மைக்ரோபயாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மோல்னூபிராவிரிலிருந்து (Molnupiravir) கார்னியா நோயாளிகளுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும். மேலும் இது கடுமையான நோய்களிலிருந்து தடுக்கவும் உதவும். இந்த ஆய்வின் ஆசிரியர், ரிச்சர்ட் பிளம்பர் கூறுகையில்., கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க (Corona Treatment) வாய்வழி மருத்துவம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார். MK-4482 / EIDD-2801 கொரோனா சிகிச்சையில் ஒரு முக்கிய திருப்பமாக நிரூபிக்கப்படலாம்'.


ALSO READ | அமைச்சர் அனில் விஜ் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசி பலனளிக்காதது ஏன்..!!!


இந்த மருந்து ஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப ஆராய்ச்சியில் இந்த மருந்து இன்ஃப்ளூயன்ஸா போன்ற கொடிய காய்ச்சலை குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தது, அதன் பிறகு ஒரு ஃபெரெட் மாதிரி மூலம் SARS-CoV-2 உடன் தொற்றுநோயைத் தடுக்க ஆராய்ச்சி செய்யப்பட்டது.


இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள, விஞ்ஞானிகள் முதலில் சில கொரோனா வைரஸால் (Corona Virus) பாதித்த விலங்குகளில் இந்த ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த விலங்குகள் மூக்கிலிருந்து வைரஸை வெளியிடத் தொடங்கியவுடன், அவர்களுக்கு MK-4482 / EIDD-2801 அல்லது molnupiravir வழங்கப்பட்டது. இந்த பாதிக்கப்பட்ட விலங்குகள் பின்னர் ஆரோக்கியமான விலங்குகளுடன் ஒரே கூண்டில் வைக்கப்பட்டன.


நோயாளிகள் 24 மணி நேரத்தில் குணமடைவார்கள்


ஆராய்ச்சி இணை ஆசிரியர் ஜோசப் வோல்ஃப்-யின் கருத்துப்படி., பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் வைக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான விலங்குகள் எதற்கும் தொற்று பரவவில்லை. கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மோல்னோபிராவிர் மருந்து பயன்படுத்தப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் நோய்த்தொற்று நோயாளிக்கு முடிக்கப்படும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR