பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் கட்டாயம் ட்ரை பண்ணுங்க
பல ஆயுர்வேத மூலிகைகள் கூந்தலின் பொடுகை நீக்கி, கூந்தலை வலுவாகவும், நீளமாகவும் வைத்திருக்க உதவும். அத்தகைய சூழ்நிலையில் ஆயுர்வேத ஹேர் மாஸ்க் ஒன்றை பயன்படுத்தினால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம்.
ஆயுர்வேத கூந்தல் ஆரோக்கிய டிப்ஸ்: நீளமான கூந்தல் யாருக்கு தான் பிடிக்காது. நீளமான கூந்தல் அழகாகவும் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் நீண்ட கூந்தல் என்பது கனவாகவே மாறிவிட்டது. மாறாக முடி உதிர்தல், நரை முடி மற்றும் பொடுகு (Dandruff) போன்ற முடி பிரச்சனைகள் வரத் தொடங்கிவிடுகிறது. முடி நீளமாகமல் வளரி பெறாமல் இருக்க பொடுகு ஒரு முக்கிய காரணமாகும். நமது கூந்தலில் ஏற்படும் பொடுகு பூஞ்சையால் வருகிறது. இதனால் உச்சந்தலையில் அதிகம் எண்ணெய் மற்றும் தோல் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட ஆயுர்வேத ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம். இது உங்கள் மயிர்க்கால்களை பலப்படுத்துவதுடன் பொடுகை தொல்லை நீக்கி முடி உதிர்வை (Hair Fall Tips) தடுக்க உதவும். இந்த ஹேர் மாஸ்க்கை இப்போது எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
பொடுகை நீக்கி கூந்தலை நீளமாகவும் வலுவாகவும் மாற்ற ஆயுர்வேத ஹேர் மாஸ்க் :
* தயிரில் (Curd) அதிகளவு புரதம் நிறைந்துள்ளது மற்றும் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தை இது அளிக்கிறது.
* தயிரில் உள்ள சத்துக்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
* திரிபலா மற்றும் வேம்பு ஆகியவற்றில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை பொடுகை நீக்கும் மற்றும் உச்சந்தலையில் அரிப்பை அகற்ற உதவும்.
* இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், பொடுகு தொல்லை நீங்கும்.
* திரிபலா, வேம்பு, பிரிங்ராஜ் மற்றும் இஞ்சி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கூந்தலை தடவினால் பொடுகு நீங்கி முடி அரிப்பை (Sclap Iching) சரி செய்ய உதவும்.
* இது கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | Beauty Tips: தூங்குவதற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள்.. முகம் பளபளவென இருக்கும்
ஆயுர்வேத ஹேர் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 தேக்கரண்டி
உலர் திரிபலா - 1 டீஸ்பூன்
வேப்பம்பூ தூள் - 1 டீஸ்பூன்
பிரிங்ராஜ் - 1 டீஸ்பூன்
உலர் இஞ்சி (சுக்குப் பொடி) - 1 தேக்கரண்டி
செயல்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் முதலில் நன்றாக கலந்து பேஸ்ட் வடிவில் செய்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். பின்னர் இதை கூந்தலில் நன்றாக தடவவும். சுமார் அரை மணி நேரம் முடிந்த பிறகு முடியை வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு பயன்படுத்தினால் கட்டாயம் பலன் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ