சரும ஆரோக்கிய குறிப்புகள்: மாறிவரும் வாழ்க்கை முறையால் நம்முடைய சருமம் மந்தமாகவும், உயிரற்றதாகவும் மாறிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சந்தையில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம், அதனால் சருமத்தில் மோசமான விளைவை மட்டுமே தரும். அதுவே ஒரு சிலர் விலையுயர்ந்த சிகிச்சைகளை முகத்தில் செய்துக் கொள்கின்றனர். இருப்பினும் சரியான பலனை பெறுவதில்லை. இந்நிலையில், சரும ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமானால் ஒரு சில வீட்டு வைத்தியத்தியங்களை பின்பற்றினால் போதும். சிறந்த பலனுக்கு இரவு தூங்குவதற்கு முன்பு பின்பற்றவும்.
கற்றாழை ஜெல்லில் இருந்து டோனர் (Aloevera Gel Toner) :
உங்கள் சருமத்தில் பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் வராமல் இருக்க கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, தழும்புகள் ஏற்படாமல் இருக்கும். டோனராகவும் இந்த கற்றாழை ஜெலலைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | Cervical Cancer: கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் இவைதான்!
கற்றாழை ஜெல்லை இந்த முறையில் பயன்படுத்துங்கள் :
டோனரை தயாரிக்க முதலில் கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் போட்டு, பின்னர் அதில் ரோஸ் வாட்டரை கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பின்னர் அதை வடிகட்டவும். அதன் பின் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த ஜெல்லை போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த டோனரை இரவு தூங்கும் முன் தினமும் முகத்தில் தடவவும். இந்த டோனரை பயன்படுத்துவதன் மூலம், சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
ஷியா வெண்ணெய் பயன்படுத்தலாம் :
வறண்ட சருமத்திற்கு ஷியா வெண்ணெய் பயன்படுத்துங்கள். இதனால் முகம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
ஷியா வெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள் :
ஷியா வெண்ணெயை முதலில் உருக வைக்கவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் கிளிசரின் கலக்கவும். இதற்குப் பிறகு, இதை ஃபிரிஜ்ஜில் வைக்கவும். பின்னர் அதை இரவு தூங்கும் முன் முகத்தில் நன்றாக தடவவும். சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் :
இது போன்ற வீட்டு வைத்தியத்தை செய்ய முதலில் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். கற்றாழை ஜெல்லை அப்படியே முகத்தில் தடவலாம். ஏதேனும் சரும பிரச்சினை இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.
அரிசி கழுவிய தண்ணீர் :
இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தை கழுவுவதற்கு சாதாரண தண்ணீர் பயன்படுத்துவதற்கு முன்பு அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தலாம். இதை நீங்கள் சிறந்த கிளன்சராக தினமும் பயன்படுத்துகிறார்கள். இதை தயாரிக்க முதலில் ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி முகம் கழுவுவதற்குப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Bone Health: இதையெல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க... எலும்பு வீக் ஆயிடும் எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ