வெள்ளை முடியை கருமையாக்க இந்த பழச்சாற்றை பயன்படுத்துங்க
நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இந்த பழத்தின் நீர் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கறுப்பான, நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் சிலருக்கு சிறு வயதிலேயே முடி வெள்ளையாக மாற ஆரம்பிக்கிறது. அப்படி இருந்தால் இதற்கு சிறந்த தீர்வு நெல்லிக்காய் ஆகும். இந்த பழத்தில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சி, போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதன்படி நெல்லிக்காய் நீரை பயன்படுத்தி முடியை ஆரோக்கியமாகவும் கருமையாகவும் மாற்றுவது எப்படி என்பதை இன்று நாம் காண உள்ளோம்.
வெள்ளை முடியைக் கண்டு விரக்தியடைய வேண்டாம்
முடி நரைப்பதற்கு உண்மையான காரணம் தவறான உணவுமுறை மட்டுமல்ல, பல நோய்களின் தாக்கத்தாலும், முடி முன்கூட்டியே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. கூந்தலை கருப்பாக வைத்திருக்க, அதிக டென்ஷன் எடுக்க வேண்டியதில்லை, ஏனென்றால் இயற்கையாகவே கருமையாகிவிடும், இதற்கு விலை உயர்ந்த பொருட்கள் தேவைப்படாது.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
நெல்லிக்காய் நீரை முடியில் பயன்படுத்துவது எப்படி?
1. வெள்ளை முடியில் இருந்து விடுதலை
தலைமுடியை கருமையாக்க நெல்லிக்காய் நீருடன் மருதாணி கலந்து தலைமுடியில் தடவலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் நீரில் மருதாணியை கரைக்கவும், பின்னர் இந்த கலவையை தலைமுடியில் தடவ வேண்டும். இந்த கலவை காய்ந்ததும், உங்கள் தலைமுடியை சாதாரண தண்ணீர் அல்லது லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இப்படி செய்வதன் மூலம் முடி நீளமாக வளருவது மட்டுமின்றி வேர்களும் வலுவாக இருக்கும்.
2. பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை
பொடுகு போன்ற பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள் நெல்லிக்காய் நீரை உபயோகிப்பதன் தீர்வு பெறலாம். இதற்கு முதலில் நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை நீக்கிவிட்டு அந்த கலவையை பிரஷ் மூலம் தலைமுடியில் தடவ வேண்டும். தண்ணீர் வற்றியவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவவும். நீங்கள் விரும்பினால், தலைமுடியைக் கழுவுவதற்கு லேசான ஷாம்பூவையும் பயன்படுத்தலாம்.
3. வலுவான கூந்தலுக்கு நெல்லிக்காய் நீர்
கூந்தல் வலுவாக இருக்க, நெல்லிக்காய் நீரில் நெல்லிக்காய் பொடியை கலந்து, அந்த கலவையை பிரஷ் மூலம் வேர்களில் தடவவும். கலவை காய்ந்ததும், சாதாரண நீரில் கழுவவும். இப்படி செய்வதன் மூலம் பல முடி பிரச்சனைகளை போக்கலாம்.
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR