இணையத்தை கலக்கி வரும் போலீஸ் பயிற்சி நாய்! வீடியோ உள்ளே!
ஆபிசர் போன்சோ காவல் நாய் ஒன்று தனது பயிற்சியாளருக்கு முதலுதவி செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
ஆபிசர் போன்சோ காவல் நாய் ஒன்று தனது பயிற்சியாளருக்கு முதலுதவி செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
காவல்துறை அதிகாரியும் K9 வகை நாய்கள் பயிற்சியாளருமான ஒருவர், மயக்கம் அடைந்து தரையில் விழுவது போல நடிக்கிறார். அதனை கண்ட போலீஸ் பயிற்சி நாய், அவரிடம் ஓடோடி வந்து தன் பயிற்சியாளருக்கு முதலுதவி செய்கிறது.
அந்த போலீஸ் பயிற்சி நாய் தனது பயிற்சியாளரின் இதயத்தை மேலும் கீழுமாக அழுத்தி, சுவாச மீட்பு முயற்சியில் ஈடுபடுகிறது.
சில நிமிடங்களுக்கு பிறகு, எழுந்திருக்கும் பயிற்சியாளர் அந்த போலீஸ் பயிற்சி நாயை கட்டித்தழுவி பாராட்டுகிறார்.
இந்த வீடியோ தற்போது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மேட்ரிட் காவல் துறையினர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.