புதுடெல்லி: சில ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் அமோக வெற்றியாக இருக்கும். மறுபுறம், சில ராசிகாரர்கள் இந்த வாரம் பல சிக்கல்களில் சிக்கிக் கொள்வார்கள். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு 2021 நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை நேரம் எப்படி இருக்கும் என்பதை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். இந்த வாரம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். 


ரிஷபம்: இந்த வாரம் உத்தியோகத்தில் பதவி, கௌரவம் கூடி பொருளாதார மகிழ்ச்சி கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள் மகிழ்ச்சியான ஆதரவைப் பெறுவார்கள்.


ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும்  5 ராசிக்காரர்கள்!


மிதுனம்: இந்த வாரம் வேலை அல்லது மத சம்பந்தமான பயணங்கள் இருக்கூடும். தொண்டு பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். உங்கள் தாயுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.


கடகம்: இந்த வாரம் வியாபாரத்தில் வெற்றி இருக்காது. உயர் பதவியில் இருப்பவர்களுடன் நல்லுறவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.


சிம்மம்: இந்த வாரம் வெளியூர் பயணம் சாதகமாக அமையும். மற்றவர்களிடம் இருந்து நல்ல தொகையைப் பெறுவீர்கள். நீங்கள் மத இயல்புடையவராக இருப்பீர்கள், மேலும் மதப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலைத் துறையில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.


கன்னி: இந்த வாரம் வியாபாரத் துறையில் லாபகரமான சூழ்நிலை இருக்கக்கூடும். உங்களுக்கு நல்ல செய்திகள் மேலோங்கும் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும், வாழ்க்கைத்துணையுடன் நல்ல உறவு இருக்கும்.


துலாம்: இந்த வாரம் வாழ்க்கையில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம், அதை உரிய நேரத்தில் தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல பணமும் லாபமும் இருக்கும். இந்த வாரம் குழந்தைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும்.


விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். மதப் பணிகளில் மனம் ஈர்க்கப்படும். குடும்பத்தில் நல்ல ஆதரவு இருக்கும், வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.


தனுசு: இந்த வாரம் குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள். பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், மரியாதையும், ஒத்துழைப்பும் அதிகரிக்கும். இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு அமையும்.


மகரம்: இந்த வாரம் குடும்பத்தில் சிறந்த ஆதரவு கிடைக்கும். தொழில், வேலை என இரண்டிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் மூலம் அனைத்து உதவிகளையும் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.


கும்பம்: இந்த வாரம் எதிரி வர்க்கம் உங்களைத் துன்புறுத்த முயற்சிக்கும். உங்கள் வேலையில் எச்சரிக்கையாக இருப்பீர்கள். பிஸியான வேலை அல்லது மனநலப் பிரச்சனைகள் காரணமாக இரவில் சரியான தூக்கம் வராது. புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.


மீனம்: இந்த வாரம் திருமண வாழ்வில் இனிமை உண்டாகும். தொழில்-வியாபாரம் லாபகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.


READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR