யூரிக் அமிலத்தை கட்டுபடுத்த மஞ்சள் நிற சட்னி: பொதுவாக நமது இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படும். அத்தகைய சூழிநிலையில் இந்த வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க வேண்டுமானால், யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். உடல் பியூரின் எனும் சேர்மத்தை உடைக்கும்போது இந்த அமிலம் உருவாகிறது. இதில் பெரும்பாலானவை சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் அதிக பியூரின் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கின்றன. இவை இறைச்சி, மீன், மது போன்ற உணவு மற்றும் பானங்களில் காணப்படுகின்றன. அந்த வகையில் உடலில் இருந்து யூரிக் ஆசிட் அளவைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், உணவு முறையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்நிலையில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ரெசிபி ஒன்றை முயற்ச்சி செய்துப் பாருங்கள். எனவே இப்போது நன்மைகள் இந்த உணவின் செய்முறையை தெரிந்து கொள்வோம்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூரிக் அமிலத்தை கட்டுபடுத்த எலுமிச்சை தோல் சட்னி:
யூரிக் அமில அளவைக் குறைக்கும் பண்பு எலுமிச்சையிலும் அதன் தோலில் இருப்பதாக சில ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனெல் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி  எலுமிச்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை உடலின் வீக்கத்தை குறைக்க உதவும். இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க நீங்கள் விரும்பினால், எலுமிச்சைத் தோலினால் தயார் செய்யப்பபடும் சட்னியை உட்கொள்ளலாம்.


மேலும் படிக்க | ரெண்டே வாரத்துல கத்தை கத்தையா முடி வளர இந்த ஆயுர்வேத மூலிகை ஒன்று போதும்


எலுமிச்சை தோல் சட்னி செயல்முறை:


தேவையான பொருட்கள்:
எலுமிச்சை தோல்கள் - 1/2 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்


செயல்முறை:
எலுமிச்சை தோல் சட்னி தயாரிக்க முதலில் 1 கப் அளவில் எலுமிச்சை தோலை எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த தோலை வெந்நீரில் கொதிக்க வைக்கவும், பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டி, பின்னர் மிக்ஸி ஜாரில் இந்த தோலை போட்டு, அதில் உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகத்தைப் போடவும். அதன் பிறகு அதில் மஞ்சள், சர்க்கரை, சேர்த்து ருசிக்கேற்ப கலந்து வதக்கவும். 2 நிமிடம் வேகவிடவு. இதோ ரெடியானது உங்களின் சுவையான எலுமிச்சை தோல் சட்னி.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ