Horoscope 2022: புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டு தங்களுக்கு பல நல்ல பலன்களை அள்ளித்தர வேண்டும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2022 ஆம் ஆண்டின் ஜோதிட கணிப்புகளின் படி, கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்திலேயே நிதி ஆதாயம் உண்டாகும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் வேலைகளில் தடைகள் ஏற்படும்.


செப்டம்பர் 2022 வரையிலான காலம் வியாபாரம் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். இது தவிர, ஏப்ரல் மாதத்தில் வியாழன் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) நல்ல மரியாதையை கொடுக்கும். இது தவிர 2022ல் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு இன்னும் என்னென்ன நற்செய்திகளை கொண்டு வரவுள்ளது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


கன்னி ராசி பலன் 2022 பலன்கள்


கன்னி (Virgo) ராசிக்காரர்களுக்கு புதிய ஆண்டு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இது தவிர, வேலை மாறுவதற்கும் புத்தாண்டு சிறப்பான வாய்ப்புகளை அளிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் புதிய முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.


ALSO READ | 2022-ல் இவர்கள் மீது சனி பகவானின் நேரடி தாக்கம் இருக்கும்: சிலருக்கு சோதனை, சிலருக்கு சாதனை


கன்னி ராசிக்காரர்களின் நிதி நிலை எப்படி இருக்கும்


புதிய ஆண்டின் ஆரம்பம் நிதி விஷயங்களில் சிறப்பாக இருக்காது. ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் அதாவது ஜூன் மாதத்தில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். செவ்வாயின் சுப ஸ்தானத்தால் திடீர் பண ஆதாயம் உண்டாகும். இருப்பினும், புத்தாண்டில், அதிகப்படியான செலவுகளால் சிக்கல்கள் ஏற்படும். ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும்.


ALSO READ | இந்த ராசிக்காரருக்கு வரும் புத்தாண்டு உண்மையிலேயே 'HAPPY NEW YEAR' தான்...!! 


கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?


கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை (Love Relationship ) 2022 ஆம் ஆண்டில் சாதாரணமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கும். காதலர்களுக்கு புத்தாண்டு பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். காதல்கள் பிரிவதால் மன உளைச்சல் ஏற்படும். ஆனால் வருட இறுதியில் காதல் வாழ்க்கை நன்றாக மாறிவிடும்.


கன்னி ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை


இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை 2022 ஆம் ஆண்டில் ஒரு கலவையாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில், நிலைமை சற்று எதிர்மாறாக இருக்கும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் நிலைமை சீராகும். குடும்பச் சண்டைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.


(குறிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | 2021 December 8: வாக்குவாதங்களைத் தவிர்ப்பது இந்த 2 ராசிக்காரர்களுக்கு நல்லது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR