ஆட்டோவில் நடந்த பிரசவம், ஆண்டவனாய் மாறிய ஆட்டோ ஓட்டுனர்: தாயும் சேயும் நலம்!!
தெய்வங்கள் சில சமயம் மனித உருவில் வருவதுண்டு. அப்படித்தான் இந்த ஆட்டோக்காரரும் அந்த பெண்மணிக்காக வந்தார் என்றே சொல்லலாம்.
கோவை: தெய்வங்கள் சில சமயம் மனித உருவில் வருவதுண்டு. அப்படித்தான் இந்த ஆட்டோக்காரரும் அந்த பெண்மணிக்காக வந்தார் என்றே சொல்லலாம். கோவைகு அருகில் பொள்ளாச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் (Auto Driver) , ஒரு பெண் தன் ஆட்டோவிலேயே பிரசவிக்க உதவி செய்து, அந்தப் பெண்ணுக்கு கடவுளாக மாறியுள்ளார்.
தோப்பம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஏ வெள்ளிங்கிரியின் (A Vellingiri) சமயோஜித சிந்தனை மற்றும் உடனடி நடவடிக்கையால், தாய்க்கும் குழந்தைக்கும் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைத்தது.
செவ்வாயன்று, பொன்னுபாளையம் கிராமத்தில் ஒருவரை விட்டுவிட்டு, வெள்ளிங்கிரி திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில், சில கிராமவாசிகள் பொள்ளாச்சி (Pollachi) GH-சிற்கு ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் செல்வதற்காக ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
மாலை 4 மணியளவில் ஆட்டோவில் ஏறிய சில நிமிடங்களில், அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடுமையான பிரசவ வலி எடுத்தது. பெண் வலியால் துடித்துக் கொண்டிருந்ததார். உடன் வந்த மூன்று பெண்களும் குழந்தையின் தலை ஏற்கனவே வெளிவரத் தொடங்கிவிட்டதாகக் கத்தினார்கள். ஆட்டோ ஓட்டுனருக்கும் அச்சம் ஏற்பட்டது.
அதற்குள், ஆட்டோ சுமார் இரண்டு கி.மீ தான் சென்றிருந்தது. GH-ஐ அடைய இன்னும் ஏழு கி.மீ தூரத்தை கடக்க வேண்டி இருந்தது.
"சாலையில் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருந்தது. மேலும் GH- ஐ அடைய நீண்ட நேரம் எடுக்கும் என்பதை நான் உணர்ந்தேன். ஆகவே எனது ஆட்டோவை சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தை நோக்கி செலுத்தினேன். ஒரு குறுக்கு வழியில் மாலை 4.20 மணியளவில் மருத்துவமனையை அடைந்தேன்” என்றார் ஆட்டோ ஓட்டுனர் வெள்ளிங்கிரி.
அந்த பெண், அதற்குள், ஒரு ஆண் குழந்தையை பிரசவித்திருந்தார். “செவிலியர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் உதவியுடன், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த என் ஆட்டோவில் தொப்புள் கொடி அகற்றப்பட்டு குழந்தை பாதுகாப்பாக எடுக்கப்பட்டது. தாய் மற்றும் குழந்தை இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் எனக்கு நன்றி கூறினார்கள். எந்த பணமும் வாங்கிக்கொள்ளாமல் நான் அங்கிருந்து திருப்தியுடன் கிளம்பினேன்”என்று அமைதியாகக் கூறுகிறார் இந்த ஆட்டோ ஓட்டுனர்.
ALSO READ: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்: காரில் உலா வந்த கர்ணப் பிரபு!!
இந்த கிராமப்புறத்தில் வாடகைக்கு ஆட்டோ அல்லது காரோ கிடைப்பதில்லை என்றும் தான் பொன்னுபாளையம் கிராமத்திற்கு அன்று சென்றது கடவுளின் கட்டளை என்றும் அவர் தெரிவித்தார்.
“இதுபோன்ற அவசர காலங்களில் கூட உடுமல்பேட்டை - பொள்ளாச்சி சாலையில்தான் வாகனங்களை வாடகைக்கு எடுக்க முடியும். அதற்கு கிராமவாசிகள் சில கிலோமீட்டர் வர வேண்டியிருக்கிறது. நான் செய்த உதவிக்கு அனைவரும் புகழ்வதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது”என்று அவர் கூறினார்.
ஆட்டோவுக்குள் பிரசவத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் உதவி செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சரியான சமயத்தில் சரியான முடிவெடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த கர்ப்பிணிப் பெண்ணை (Pregnant Woman) அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனர் பாராட்டப்பட வேண்டியவர். நேரம் வீணாகாமல் தாய்க்கும் குழந்தைக்கும் கிடைத்த மருத்துவ உதவி மிகவும் முக்கியமானது.
ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!