நம் உடலில் இருந்து வரும் வாயில் இருந்து வரும் வாசமும் நமக்கு தெரிகிறதோ இல்லையோ, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு தெரிகிறது. வாயில் இருந்து வரும் நாற்றத்தால் பலருக்கு எங்குமே பேச தைரியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலருக்கு அவர்கள் குறித்தே நல்ல அபிப்பிராயங்கள் இல்லாமல் போகலாம். இதனால் அவர்களின் சுய உணர்வு எப்போதும் உயரிய நிலையில் இருக்கும். இதை மாற்றி அமைப்பதனால், பேசுவதற்கு தைரியம் அதிகரிப்பது மட்டுமன்றி, தன்னம்பிக்கையும் வளரும். ஒரு பொது வெளிக்கு செல்லும் போது நம்மை நன்றாக காண்பித்து கொள்வதற்கும், நாம் நன்றாக உணருவதற்கும் வாயின் நல்ல சுவாசம் உதவும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாய் நாற்றம் எதனால் ஏற்படுகிறது?


வாய் நாற்றத்தை ஹலிடாசிஸ் என்று கூறுவர். வாயை சரியாக பராமரிக்காததால், வாயில் பாக்டீரியாக்கள் படிந்துள்ளதால், உடல் நலக்கோளாறுகள் காரணமாக கூட வாய் நாற்றம் ஏற்படும். வாய் உலர்ந்து போவதால், பாக்டீரியாக்கள், சிகரெட் புகைத்தல், புகையிலை உபயோகித்தல் ஆகியவற்றாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். பெரும்பாலும் பாக்டீரியாவால் வாயில் உள்ள புரதங்கள் சிதைந்து போகின்றன. இதனாலேயே வாயில் இருந்து துர்நாற்றம் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து வாய் நாற்றத்தை தடுக்கலாம். 


பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றை சாப்பிட்ட பின்பு கூட வாயில் இருந்து துர்நாற்றம் வெளிபடும். ஈறுகளில் பிரச்சனை, சுவாச கோளாற்கள், செரிமான பிரச்சனைகள், வயிற்று பிரச்சனைகள், வயிற்றுப்புண் ஆகியவையும் கூட வாய் துர்நாற்றத்திற்கான காரணிகளாக இருக்கலாம். 


சுகாதாரத்தை பேண வேண்டும்:


வாய் சுகாதாரத்தை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது முக்கியம். காலை மற்றும் இரவு நேரங்களில் பல் துலக்குவது நல்லது. டூத் பேஸ்டை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். நாக்கை வழிப்பதற்கான கருவியை உபயோகப்படுத்தியோ அல்லது உங்கள் பிரஷ்ஷை உபயோகித்தோ நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், நாக்கில் இருக்கும் பாக்டீரியாக்கலும் வாய் நாற்றத்திற்கு உதவும். பற்களின் இண்டு இடுக்குகள் என அனைத்திலும் நன்றாக பல்துலக்க வேண்டும். இறுதியில், நன்றாக வாயை கொப்பளித்து உமிழவும். இதற்கு மவுத் வாஷையும் உபயோகிக்கலாம். 


மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் காலையில் இந்த உணவுகள் சாப்பிட கூடாது!


உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும்:


வாய் வறண்டு போயிருந்தால் துர்நாற்றம் ஏற்படும். தொடர்ந்து தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீரேற்றத்தை பராமரித்து கொள்ளலாம். அடிக்கடி தண்ணீர் குடிப்பது, நீர் பாக்டீரியா மற்றும் உணவுத் துகல்களை வாயில் இருந்து கழுவ உதவுகிறது, இயற்கையாகவே வாயை சுத்தப்படுத்தும் உமிழ்நீர் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கிறது. பூண்டு, வெங்காயம் மற்றும் காரமான உணவுகள் போன்ற சில உணவுகள் வாய் துர்நாற்றம் ஏற்பட காரணமாக இருக்கும். ஆப்பிள்கள், கேரட் மற்றும் செலரி ஆகியவை பற்களை இயற்கையாகவே சுத்தம் செய்ய உதவும். எனவே அதையும் அடிக்கடி சாப்பிடலாம். 


புகைபிடிப்பதை நிறுத்துங்கள்:


புகைபிடித்தல் பற்களை கறைப்படுத்துவது மட்டுமல்லாமல் வாயை வறண்டு போக செய்கிறது. மேலும், இது வாய் துர்நாற்றத்திற்கும் வழி வகுக்கிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஹலிடோசிஸ் எனப்படும் வாய் துர்நாற்றத்தை கணிசமாகக் குறைக்கும்.


பல் பரிசோதனைகள்:


அடிக்கடி பல் மருத்துவம் செய்து கொள்வது மிகவும் முக்கியம். பல் மருத்துவர் உங்களது பிரச்சனை என்னவோ அதை கண்டறிந்து ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு அறிவுரை கூறுவார். மேலும், வாய் துர்நாற்றத்தை நீக்கும் வழிகளையும் கூறுவார். இதனால், பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை இருந்தாலும் கண்டிருந்து அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 


இயற்கை வைத்தியம்:


இனிப்பு சேர்க்காத சுவிங் கம் மெல்லுவது, புதினா ஃப்ளேவர் உள்ள சுவிங் கம் மெல்லுவது ஆகியவை வாய் துர்நாற்றத்தை தடுக்க உதவும். இதனால், வாயில் எச்சில் சுரக்கவும் உதவும். இதனால், வாயில் உள்ள பாக்டீரியக்கள் அழியும். புதினா, துளசி இலைகளை மெல்லுவது நல்ல வாய் சுவாசத்திற்கு உதவும். பெருஞ்சீரகம் விதைகளும் வாய் நாற்றத்தை தவிர்க்க உதவும். 


உடல் நலக்கோளாறுகளை போக்க உதவும்:


நீண்ட நாட்களாக இருக்கும் துர்நாற்றம் நீரிழிவு, இரைப்பை குடல் பிரச்சினைகள் அல்லது சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் சிக்கலை தீர்க்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகவும். 


மேலும் படிக்க | Ghee Benefits: உடல் எடையை குறைக்கணுமா? நெய்யை இந்த முறையில் தினசரி சாப்பிடுங்க!


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ