திருமணம் ஆக வேண்டும் என்றால் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சொல்லி வைத்து இரு வீட்டார் பார்த்துக்கொள்ளும் காலம் எல்லாம் மலையேறி விட்டது. காதலிப்பதற்கென்று, டேட்டிங்க செல்வதற்கென்றும் தனித்தனி ஆப்கள் வந்து விட்டது போல, திருமணத்திற்கு வரன் தேடுவதற்கும் பல தளங்கள் வந்து விட்டன. இதில், உங்கள் வாழ்க்கை துணைக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த வகையிலேயே வரன்களும் அமையும். ஆனால், அதில் ஒரு சிலரது ப்ரோஃபைல்கள், பார்த்தவுடன் கவரும் வகையில் இருக்கும். அப்படி, தனித்துவமான சுய விவரத்தை திருமண தளத்தில் இணைப்பது எப்படி? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈர்க்கும் வகையிலான அறிமுக குறிப்பு:


வேலைக்கான சுய விவர குறிப்பில் இருந்து திருமணத்திற்கான சுய விவர குறிப்பு வரை அனைத்திலும், நம்மை குறித்து நாமே கூறும் வகையில், சிறிய வகையிலான அறிமுக குறிப்பு இருப்பது அவசியம். இன்றைய டிஜிட்டல் மேட்ச்மேக்கிங் உலகில், உங்கள் சுயவிவர தலைப்பு மற்றும் அறிமுகம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இது, ஒரு நபரின் முதல் ஈர்ப்பாக பார்க்கப்படுகிறது. இணையத்தில் இருந்து பிறரின் சுய விவரக்குறிப்பினை எடுத்து பதிவிடுவதை விடுத்து, நீங்கள் யாரென்று நினைக்கிறீர்களோ, உங்களது நல்ல குணங்கள் என்று எதை நினைக்கிறீர்களோ அதை மட்டும் அறிமுக குறிப்பினில் எழுதுங்கள். 


நல்ல புகைப்படம்:


திருமண தளத்தில் உங்களது புகைப்படத்தை பதிவிடுகையில் அது நல்ல, தெளிவான புகைப்படமாக இருக்கிறதா என்பதை பாருங்கள். ஒரு புகைப்படம் என்று அல்ல, பல புகைப்படங்களையும் நீங்கள் பதிவிடலாம். இதுவும், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்கள் பக்கத்தின் முகப்பிற்கு வருபவர்களுக்கு காண்பிக்கும். உங்களுக்கு பிடித்த ஹாபிக்களை செய்வது போன்ற புகைப்படத்தையும் நீங்கள் பதிவிடலாம். 


முழு விவரங்கள்:


உங்களை பற்றிய விவரம் மிகவும் முக்கியமானது. உங்கள் சுயவிவரத்தின் ஒவ்வொரு பகுதியையும் துல்லியமாகவும் விரிவாகவும் குறிப்பிடவும். இது உங்கள் கல்வி, தொழில், குடும்பம் பற்றிய விவரங்களாகவும் இருக்கலாம்.
நீங்கள் வளர்ந்த பின்னணி மற்றும் வாழ்க்கை முறை அனைத்தையும் உள்ளடக்கிய சுயவிவரம் உங்களை பற்றிய நல்ல கருத்தினை பிறர் மனதில் விதைக்கும். 


மேலும் படிக்க | இரவு சாப்பிட்ட பிறகு இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!


வாழ்க்கை துணை குறித்த விவரங்கள்:


உங்களது வாழ்க்கைத் துணையிடம் இருந்து என்ன விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக வரையருக்கவும். ஒருமித்த மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் உள்ளிட்ட நீங்கள் விரும்பும் குணங்களைக் குறிப்பிடவும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்பவருக்கும் உங்களுக்கும் ஒத்து போகாமல் கூட போகலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 


சாதனைகளை குறிப்பிடவும்:


கல்வி ரீதியாக, தொழில் ரீதியாக நீங்கள் என்னென்ன சாதனைகள் புரிந்தீர்கள் என்பதை குறிப்பிடலாம். உங்கள் சாதனைகள் குறித்து பேசுபவர்களிடம் அது குறித்து விவாதிக்கவும். எதிர்காலத்தில் இது போல என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் பேசலாம். இது, இன்னொருவருக்கு உங்களை பிடிக்க வைப்பது மட்டுமன்றி, உங்கள் கனவை நோக்கி உங்களை ஓட வைக்கும். 


பாதுகாப்பு முக்கியம்..


வசதிக்கு ஏற்ப உங்கள் கணக்கில் தனியுரிமை அமைப்புகளை செட் செய்யவும். ஒருவரிடம் முதல் சந்திப்பின் போது அல்லது முதல் உரையாடலின் போது எவ்வளவு வரையறுக்கப்பட்ட தகவல்களை பகிர வேண்டுமோ அந்த அளவிற்கு பகிர்ந்தால் போதுமானது. உங்களது தனிப்பட்ட எல்லைகளை எதிரில் இருக்கும் நபர் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | அதிக கொலஸ்ட்ரால் மாரடைப்பை ஏற்படுத்தலாம்! இந்த 4 உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ