TTD Online Ticket Booking: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் முதல் தங்கும் விடுதிகள் வரை ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த வசதியின் மூலம், உங்கள் தரிசனத்தையும், தரிசன நேரத்தையும் சரியாக திட்டமிட்டுக்கொள்ளலாம். எனவே, இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு கடும் கெடுபிடி இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், பல்வேறு தரிசனங்கள், சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை குறித்த அப்டேட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான டிக்கெட் விற்பனை தனியாக தொடங்கப்படும். மேலும், திருமலையில் அங்கப்பிரதட்சிணம் செய்யவும் தனியாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.


டிக்கெட் முன்பதிவு விவரம்


இந்நிலையில், வரும் மார்ச் மாதத்திற்கான மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று காலை 9 மணியளவில் தொடங்கப்பட்டது. இதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய இதனை கிளிக் செய்யவும். 


மேலும் படிக்க | இந்தியாவை விட தங்கம் மிகவும் மலிவாக கிடைக்கும் உலகின் ‘சில’ நாடுகள்!


அதுமட்டுமின்றி, 300 ரூபாய்க்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் முனஅபதிவு நாளை (பிப். 24) காலை 10 மணியளவில் தொடங்கப்படும். தொடர்ந்து, வரும் ஏப்ரல், மே மாதத்திற்கான திருமலை அங்கப்பிரதட்சிணத்திற்கான டிக்கெட்டுகள் நாளை மதியம் 2 மணியளவில் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஸ்ரீவாரி மற்றும் திருமலை திருக்கோயில்களின் ஆன்லைன் தரிசனம், கல்யாண் உத்சவம், ஊஞ்சல் சேவா, அர்ஜிதா பிரம்மோத்சவம், சாஹாஸ்ரா தீபலங்காரா சேவா ஆகியவற்றின் தரிசன டிக்கெட்டுகள் நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புது தொழில்நுட்பம்


முன்னதாக, ஒருவரே பல டோக்கன்கள் வாங்குவதைத் தடுக்கும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.  இந்த தொழில்நுட்பம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வைகுந்தம் 2 மற்றும் ஏஎம்எஸ் அமைப்புகளில் சோதனை அடிப்படையில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ரயிலில் உணவு ஆர்டர் செய்வர்களுக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ