Tirumala Tirupati: திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுளாக திருப்பதி பெருமாள் கருதப்படுகிறார். இக்கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவர். இத்தகைய பிரசித்தப்பெற்ற இக்கோவிலில் சமீப காலமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலமாக இந்த தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) நிர்வாகம் சில விதிகளை தளர்த்தி பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும், சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு 5000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 


ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்


இதற்கிடையில் தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வித்தியாசமான கவர்ச்சி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து வம்பில் மாட்டிக்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் அந்த திட்டத்தில், ஒருவர் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 116 செலுத்தினால் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு அழைத்து செல்வோம் என்றும் 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது. 


இந்த விளம்பரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் ஒன்று அளித்துள்ளது. அதன்படி வி.ஐ.பி. தரிசனத்தை நேரடியாக வி.ஐ.பி.களுக்கும், அவர்களின் சிபாரிசு கடிதம் கொண்டுவருபவர்களுக்கும் மட்டுமே வழங்கி வருகிறோம். இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது சுற்றுலா நிறுவனங்களுக்கோ வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படாது. இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களை செய்யும் கும்பலை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளது.


மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை பெயரில் புதிய திட்டத்தை தொடங்கி உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10,500 செலுத்தி இந்த டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இது ஆன்லைன் மூலமாக கிடைக்கும். இந்த டிக்கெட்டை பெற்ற பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தானமே செய்து கொடுக்கிறது என தெரிவித்துள்ளது.


ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR