தீபாவளிக்குப் பின் திருப்பதி போறீங்களா? அப்போ கட்டாயம் இதை படுயுங்க
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு 24ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரமோற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்து இருந்தது. அதன்படி தொற்று பரவல் குறைந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதித்தது, அதன் பேரில் பக்தர்களும் தினசரி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதையடுத்து, 9 மணி நேரத்துக்கு முன்பாகவே, திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் 11¼ மணிநேரம் (காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை) மூடப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது, வரும் அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால், பிறகே சுவாமி தரிசனம், ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் சர்வ தரிசனத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் நேரம்:
தீபாவளி மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 04.23 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். மேலும் 06.25 வரை இந்த சூரிய கிரகணம் நீடிக்கும். இந்த சூரிய கிரகணம் ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, வடக்கு/கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பகுதிகளில் தெரியும். இந்த கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணம் சுவாதி நட்சத்திரத்தில் துலாம் ராசியில் நிகழும் என்பதால். எனவே துலாம் ராசிக்காரர்களையே இது முக்கியமாக பாதிக்கும் என கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
முன்னதாக மிக குறுகிய கால இடைவெளியிலேயே கிரகணம் காரணமாக இரண்டு நாட்களும் 12 மணி நேரம் வரை கோவில் நடை சாற்றப்பட உள்ளதாலும், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதாலும் திருமலை திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடந்த 2 வாரங்களாகவே திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு 16 முதல் 20 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு 12 முதல் 19 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அக்டோபர் மாதம் அமோகமாக இருக்கப் போகும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ