அக்டோபர் மாதம் அமோகமாக இருக்கப் போகும் ‘சில’ ராசிகள்!

அக்டோபர் ராசிபலன் 2022: அக்டோபர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 30, 2022, 09:24 AM IST
  • புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நிலைமை நன்றாக இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • திடீர் பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அக்டோபர் மாதம் அமோகமாக இருக்கப் போகும் ‘சில’ ராசிகள்! title=

அக்டோபர் ராசிபலன் 2022: அக்டோபர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள். அக்டோபர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சிகள் மற்றும் கிரக நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். அக்டோபர் மாதத்தில், மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

மேஷம்:

அக்டோபர் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும். தொடங்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். இவர்கள் வாழ்க்கையில் வசந்த காலம் தொடங்கியுள்ளது எனலாம். மேம்பட்ட வேலை தேடுபவர்களின் ஆசை நிறைவேறி சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம். வணிகர்கள் பிற வருமான ஆதாரங்களைக் கண்டறியலாம். இதனால் வருமானம் பெருகும். சொத்து அல்லது மருத்துவத் துறை தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பதவி உயர்வுடன் சம்பளமும் உயரும். நீங்கள் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த மாதத்தின் தொடக்கம் சிறப்பான நேரம். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலனைத் தரும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மை தரும். 

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களின் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிப்பதன் மூலம், நீங்கள் எதிர்காலத்திற்கான பணத்தையும் சேர்க்க முடியும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நிலைமை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். திடீர் பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். எனினும் அக்டோபர் 10ம் தேதிக்கு பிறகு செலவுகள் அதிகரிக்கலாம்.

துலாம்:

இந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 10ம் தேதிக்குப் பிறகு வேலையில் சில நல்ல தகவல்கள் கிடைக்கும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமானம், சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.இறக்குமதி-ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். நிதி ரீதியிலான விஷயங்களிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் சிறப்பான மாதம். இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இந்த மாதம் வருமானம் இருக்கும். ஆனால் அதிக செலவுகள் காரணமாக, நீங்கள் பணம் சேமிக்க முடியாது. வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சமநிலையை வைத்திருங்கள்.

விருச்சிகம்:

வெளி நாடு தொடர்பான நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பொருளாதார ரீதியாக நிலைமை சாதகமாக இருக்கும். திடீரென்று பணம் வரும் சூழ்நிலை உண்டாகும். இறக்குமதி-ஏற்றுமதி, பங்குச் சந்தை மற்றும் ஆடைகள், பொம்மைகள், உணவு மற்றும் பானங்கள், சந்தைப்படுத்தல், பொழுதுபோக்கு துறை போன்றவற்றில் உள்ள வணிகர்களுக்கு பொருளாதார நன்மைகள் ஏற்படும்.

மகரம்:

இந்த ராசிக்காரர்களுக்குப் பணப் பலன் கிடைக்கும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், நிதி நிலை வலுப்பெறும். வருமானம் பெரும். அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு இந்த நேரம் சிறப்பான நேரம். முயற்சிகளுக்கும், கடின உழைப்பிற்கும் அங்கீகாரம் கிடைக்கும். 

கும்பம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. அதனால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். இதன் காரணமாக நிதி நிலை நன்றாக இருக்கும். இக்காலத்தில் புதிய தொழில் தொடங்கலாம். புதிய தொழிலில் விரைவில் முன்னேற்றமும் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News