தமிழ்நாடு மின்வாரியத்துறை (TNEB) நுகர்வோர் தங்கள் டிஎன்இபி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை டிஎன்இபி கணக்குடன் எப்படி இணைப்பது என்கிற குழபத்தில் இருக்கின்றனர். அந்தவகையில் தமிழக அரசு ஆதார் எண் இணைப்பதற்காகச் சிறப்பு முகாம்களையும் மின்சார வாரியம் அமைத்துள்ளது. அதேபோல், ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண் இணைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் ஆன்லைனில் மின் இணைப்பு  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்பது இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் .


மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச்சில் டிஏ உயர்வு? சம்பளம் இவ்வளவு உயருமா? 



1: TNEB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும், adhar.tnebltd.org/Aadhaar/.
2: உங்கள் சேவை இணைப்பு எண், உங்கள் மொபைல் எண் பற்றிய விவரங்களை அளித்து பாதுகாப்பு கேப்ட்சாவை உள்ளிட்டு Enter ஐ அழுத்தவும்.
3: OTP ஐ உருவாக்குவதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும். OTP ஐ உள்ளிட்டு உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும். 
4: குடியிருப்பாளரின் விவரங்களை வழங்கவும்.
5: இப்போது TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய ஆதார் அட்டை எண்ணை வழங்கவும்.
6: ஆதாரில் உங்கள் பெயரை உள்ளிடவும்.
7: உங்கள் ஆதார் ஐடியை பதிவேற்றவும்.
8: படிவத்தை சமர்ப்பிக்கவும். ஒப்புகை ரசீதையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


இந்த நிலையில் நீங்களும் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்துக் கொள்ளவும்.


டிஎன்இபி கணக்கு - ஆதார் எண் இணைப்புக்கான கடைசி தேதி:
மின்சார கட்டணம் செலுத்துவதற்கு நவம்பர் 24 முதம் நவம்பர் 30 வரை கடைசி தேதி என இருந்த கணக்குகளுக்கான காலக்கெடுவை TANGEDCO நீட்டித்துள்ளது. தங்களது மின்சார சேவை எண்களுடன் ஆதாரை இணைப்பதில் வரும் பிரச்சனைகள் குறித்து நுகர்வோர் பலர் புகார் அளித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிஎன்இபி கணக்கை ஆதாருடன் இணைக்க இப்போது எந்த காலக்கெடுவும் இல்லை.


மேலும் படிக்க | 7th pay Commission: 3 தவணைகளில் கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? அப்டேட் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ