7th Pay Commission: மார்ச்சில் டிஏ உயர்வு? சம்பளம் இவ்வளவு உயருமா?

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Dec 4, 2022, 06:23 AM IST
  • அகவிலைப்படி உயர்வு குறித்த நல்லதொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.
  • அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
7th Pay Commission: மார்ச்சில் டிஏ உயர்வு? சம்பளம் இவ்வளவு உயருமா? title=

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கி மற்றும் ஃபிட்மென்ட் காரணி உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்துகொண்டு இருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த நல்லதொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  இதுகுறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் செய்திகளின்படி, விகிதங்களை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 3-5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த செப்டெம்பர் மாதம் 28ம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில் 01.07.2022 முதல் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

மேலும் படிக்க: Aadhaar Mobile Link: ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை எப்படி இணைப்பது

 

2022ம் ஆண்டு செப்டம்பரில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்களுக்கு 18 மாத நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் எழுந்தது.  நீண்டகாலமாக ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சினை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

வெளியாகியுள்ள தகவல்களின்படி நிலை-3ல் உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை மதிப்பிடப்பட்டுள்ளது.  நிலை-13 அல்லது நிலை-14க்கு, ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,15,900 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் சில சமயம் அரசு இந்த விகிதத்தை மாற்றியமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News