இன்று முதல் விண்ணப்பம் பதிவு தொடங்கியது: தமிழக அரசு நிர்வாகத்தில் பணி - TNPSC அறிவிப்பு
தமிழக அரசுப் பணிக்கு காலியாக உள்ள இடங்களை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழக அரசுப் பணிக்கு காலியாக உள்ள இடங்களை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC). விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறை குறித்து விளக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இரண்டு விதமான பணிகளை அறிவித்துள்ளது. விண்ணப்பம் இணைப்பு
பணி 1 : Inspector of Salt
நிர்வாகம் : தமிழக அரசு
காலிப்பணியிடம் : 1
கல்வித் தகுதி : வேதியியல் பிரிவில் இளநிலை பட்டம் மற்றும் ஒரு வருடம் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 35,900 - 1,13,500
பணி 2 : Store Keeper
காலிப்பணியிடம் : 1
கல்வித் தகுதி : வேதியியல் மற்றும் இயற்பியல் பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் மூன்று வருடம் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000
வயதுவரம்பு: பொதுவாக 30 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.(கட்டாயம் இல்லை) எஸ்இ/எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
இரண்டு பணிக்கும் பொதுவானது:
விண்ணப்பக் கட்டணம்: தேர்வு கட்டணம் ரூ.150 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.150;
விண்ணப்பக் கட்டணம் கடைசி தேதி: ஜனவரி 21, 2019.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : ஜனவரி 18, 2019.
தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் 24, 2019.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை மற்றும் மதுரை.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேலே இணைக்கப்பட்டு உள்ள (விண்ணப்பம் இணைப்பு) கிளிக் செய்க.