New Year 2022: புத்தாண்டின் முதல் நாளில் செய்யக்கூடாதவை! இதை கட்டாயம் செய்யவும்
2022 புத்தாண்டின் முதல் நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் ஒரு வருடம் முழுவதும் வருந்த வேண்டியிருக்கும்.
புதுடெல்லி: 2022 புத்தாண்டின் முதல் நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் ஒரு வருடம் முழுவதும் வருந்த வேண்டியிருக்கும்.
புதிதாய் பூத்திருக்கும் புத்தாண்டில் பலருக்கும் பல எதிர்பார்ப்புகளும், ஆண்டு நல்லாண்டாய் அமையும் என்ற நம்பிக்கையும் உள்ளது. புத்தாண்டின் முதல் நாளில் என்ன செய்தால், ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும் என்பதைத் தெரிந்து செயல்பட்டால், இந்நாள் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் நன்றாக கழியும்.
2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பு அனைவருக்கும் அச்சம் கொடுத்தது. அதனால் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்தோம் என்றாலும் மகிழ்ச்சியான நினைவுகளும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.
ஆனால் 2022 ஆம் ஆண்டின் (New Year 2022) மீது அனைவருக்கும் அதிக நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை நிறைவேற, புத்தாண்டின் முதல் நாளான இன்று மறந்தும் கூட இந்த வேலையைச் செய்யாதீர்கள்...
ALSO READ | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகளுக்கு இந்த புத்தாண்டு ஜாக்பாட்
புத்தாண்டு தினத்தன்று, வீட்டில் பிரச்சனைக்குரிய விஷயத்தை பேச வேண்டாம். யாரையும் எந்த விதத்திலும் அவமானப்படுத்தாதீர்கள்.
வருடத்தின் முதல் நாளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். ஆண்டின் முதல் நாளில் கருப்பு நிறத்தைப் பயன்படுத்துவது ஆண்டு முழுவதும் பிரச்சனையைத் தரும் என்று நம்பப்படுகிறது.
ஆண்டின் முதல் நாளில் இறைச்சி மற்றும் மதுவை உட்கொள்ள வேண்டாம். புத்தாண்டில் இவற்றைப் பயன்படுத்துவதால், வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படும் என்பது நம்பிக்கை.
புத்தாண்டில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், இல்லையெனில் ஆண்டு முழுவதும் (New Year 2022) உங்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக வருடத்தின் முதல் நாளில் வீட்டில் விருந்தினர்களை அழைப்பதாக இருந்தால், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை அழைக்கவேண்டாம்.
புத்தாண்டின் போது வீட்டை இருட்டாக வைக்க வேண்டாம். வீட்டில் பிரகாசிக்கும் வெளிச்சம் உங்கள் வாழ்விலும் ஒளியைக் கொண்டுவரும்.
புத்தாண்டு தினத்தன்று உங்கள் பணப்பையை காலியாக வைக்காதீர்கள். அதன் தாக்கம் ஆண்டு முழுவதும் உங்கள் நிதி நிலையில் எதிரொலிக்கும்.
புத்தாண்டில் கத்தரிக்கோல் மற்றும் கூர்மையான பொருட்களை வாங்க வேண்டாம்.
வருடத்தின் முதல் நாளில் வீட்டின் எந்த அலமாரியையும் காலியாக வைக்காதீர்கள், ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படலாம்.
Also Read | புத்தாண்டில் சனி பகவானின் அருள் பெறும் ராசிகள் இவை
இன்று செய்ய வேண்டிய வேலைகள்
இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அனுமாரை வணங்க வேண்டும்.
ஆண்டின் முதல் நாளில் சிவப்பு நிற ஆடைகளை அணிவது மிகவும் மங்களகரமானது. புத்தாண்டின் முதல் நாளில், வீட்டின் பிரதான வாசலில் ஓம் அல்லது ஸ்வஸ்திக் சின்னத்தை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
வருடத்தின் முதல் நாளில், ஒரு ஏழைக்கு உணவு தானியங்களை தானம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் அன்னபூரணி அன்னையின் அருள் ஆண்டு முழுவதும் தங்கும் என்பது நம்பிக்கை.
வருடத்தின் முதல் நாள் சூரியன் உதிக்கும்போது, சூரிய நமஸ்காரம் செய்தால், எடுத்த காரியம் துலங்கும் வேலையில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வருடத்தின் முதல் நாளில் வீட்டுப் பெரியவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசி பெறுங்கள், உங்கள் வீட்டில் பெரியவர் இல்லை என்றால், கோவிலுக்குச் சென்று வழிபடலாம்.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR