Yearly Horoscope 2022: புத்தாண்டில் சனி பகவானின் அருள் பெறும் ராசிகள்

சனிபகவான் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தருவார், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 06:20 AM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி கூடும்
  • மீன ராசிக்கு கல்யாணம் நடைபெறும்
  • மேஷராசிக்காரருக்கு பணி உயர்வு கிடைக்கும்
Yearly Horoscope 2022: புத்தாண்டில் சனி பகவானின் அருள் பெறும் ராசிகள்  title=

Yearly Horoscope 2022: சனிபகவான் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தருவார், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் காலசர்ப்ப யோகம் உருவாகிறது. இது தவிர, ஜனவரி மாதத்திலேயே சூரியன் மகர ராசிக்குள் நுழையும். ஏப்ரல் மாதத்தில் சனிபகவான் இடம் பெயர்கிறார். வேறுபல முக்கிய கிரகங்களும் பெயர்ச்சி அடைய காத்துக் கொண்டிருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டு ராசிபலன்களிலிருந்து புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளவும்.

மேஷம்: கடந்த வருடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில், உத்தியோகம், வீடு உட்பட எல்லா இடங்களிலும் வெற்றி கிட்டும். புத்தாண்டில் வீடு வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு அமையும். இதனால் வருமானம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் வரும். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் வாய்ப்புகள் கிடைக்கும். பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: நீங்கள் ஆண்டு முழுவதும் புதிய ஆற்றலுடனும் உத்வேகத்துடனும் இருக்கப் போகிறீர்கள். ஆண்டின் நடுப்பகுதியில், வேலை விஷயமாக பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்கள் புதிய சவால்களை சந்திக்க நேரிடும். தொழில் மாற்றத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு செய்யும். வங்கி நிர்வாகத்துடன் தொடர்புடையவர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். இது தவிர, தொழில்நுட்பம் தொடர்பான மாணவர்கள் பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.

மிதுனம்: 2022ஆம் ஆண்டு சாதகமாக இருக்கும். கல்வித்துறை புதிய வருமான ஆதாரமாக மாறும். அசையா சொத்துக்களால் நிதி ஆதாயம் வரும். இந்த வருடம் புதிய வீடு, நிலம், வாகனம் வாங்கலாம். கடந்த காலத்தில் செய்த முதலீடுகளின் பலன்களும் உண்டு. தினசரி வருமானம் அதிகரிக்கும். ஆண்டின் நடுப்பகுதியில் பெரிய சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனநல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், ஆண்டின் இறுதியில் இந்த பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் மாற்றத்தை செய்தால், நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும். கல்வித்துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.

கடகம் - புத்தாண்டில் வாகன சுகம் உண்டாகும். யாபாரத்தை விரிவுபடுத்துவதில் சிக்கல்கள் இருக்கும். தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். நிலத்துடன் தொடர்புடையவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஊடகம் அல்லது மருத்துவத் துறையுடன் தொடர்புடையவர்கள் இலக்கை அடைய மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

ALSO READ | இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது

சிம்மம்: வருடத்தின் மத்தியில் வேலை மாறுவது பற்றி யோசிக்கலாம். புத்தாண்டில் புதிய சொத்து வாங்கலாம். வியாபாரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். ஏப்ரலில் சம்பள உயர்வு இருக்கும். குழந்தைகளின் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கை துணையுடன் புனிதப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆண்டின் நடுப்பகுதியில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நோய்களுக்கு பணம் செலவிடப்படும். மனநல பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பொருளாதார முன்னேற்றத்திற்கு சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

கன்னி: 2022ல் நிலம் சம்பந்தமான வேலைக்களில் பம்பர் லாபம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் எந்த பெரிய விஷயமும் வெற்றி பெறும். தொழில் சம்பந்தமான வேலைகளில் அபரிமிதமான லாபம் உண்டு. பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவார்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் தொடங்குவது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். புத்தாண்டில் குடும்ப விவகாரங்களில் சில மாற்றங்கள் காணப்படும்.

துலாம்: புத்தாண்டில் புதிய தொழில் செய்வது நன்மை தரும். 2022 ஆம் ஆண்டின் (New Year 2022) மத்தியில், உங்களுக்கு நல்ல வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும். சம்பளம் வாங்குபவர்களுக்கும் பதவி உயர்வு கிடைக்கும். அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக அமையும். விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைக்கலாம். ஆண்டின் இறுதியில், வயிறு தொடர்பான நோய்கள் தொந்தரவு செய்யும். உங்கள் முன்னேற்றத்தால் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு புத்தாண்டில் சனி பகவான் சாதகமாக இருப்பார். மாமியார் தரப்பிலிருந்து பண உதவி கிடைக்கும். வருடக் கடைசியில் குடும்பத் தகராறுகளால் மன உளைச்சல் ஏற்படும்.

விருச்சிகம்: 2022ல் புதிய தொழில் தொடங்கலாம். கல்வி தொடர்பான பணிகளில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். கல்விக்காக வெளிநாடு செல்லலாம். தொழிலில் முதலீடு செய்வது நன்மை தரும். இந்த ஆண்டின் மத்தியில் நல்ல வேலை வாய்ப்பு அமையும். எழுத்தாளர்கள், வணிகத் துறை, உணவுத் துறை போன்ற துறைகளில் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். ஃபேஷன் டிசைனிங், கணினி படிப்புகள், புகைப்படம் எடுத்தல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் நல்வாய்ப்புகள் கிடைக்கும். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியாக பலன்கள் கிடைக்கும். புதிய ஆண்டில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

ALSO READ | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகளுக்கு இந்த புத்தாண்டு ஜாக்பாட்

தனுசு: இந்த ஆண்டு புதிய உயரங்களை தொடும். தேவகுரு பிருஹஸ்பதியின் அருளால் அதிர்ஷ்டமும் துணை நிற்கும். நல்ல நிறுவனத்தில் கணக்கு, நிதி மற்றும் விற்பனைத் துறையில் புதிய வேலை கிடைக்கும். ஆண்டின் மத்தியில் நல்ல அரசுத் துறையிலோ அல்லது ஏதேனும் கட்டுமானப் பணியிலோ சேரலாம். இது நிதி நிலைமையை (Economically upliftment) மேம்படுத்தும். காதலிப்பவர்கள் காத்திருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பெரிய மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது. புதிய வேலையைத் தொடங்குவதற்கு சாதகமானது. புத்தாண்டில் மார்ச் மாதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான ஆண்டு இந்த புத்தாண்டு.  

மகரம்: குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கலாம். தந்தையின் தொழில் விரிவடையும். வேலை அல்லது தொழிலில் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இடமாற்றம் ஏற்படலாம். வாழ்க்கைத்துணைக்கு வேலையில் முன்னேற்றம் உண்டாகும். புத்தாண்டில் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்: பொருளாதார ரீதியாக இந்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும். தை மாதத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சியால் பணப் பலன்கள் கிடைக்கும். சொத்துக்களால் லாபமும் கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். ஆண்டின் நடுப்பகுதியில், பணியிடத்தில் முதலாளியுடன் தகராறு ஏற்படலாம். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும். மாமியார் அல்லது மனைவியுடன் தகராறு ஏற்படலாம். இந்த நிலை சிறிது நேரம் கழித்து சரியாகிவிடும்.

மீனம்: 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் பொருளாதார ரீதியாக வளமாக இருக்கப் போகிறீர்கள். வருடத்தின் நடுப்பகுதியில் சனிபகவானின் அருளால் புதிய வருமானங்கள் உருவாகும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். அக்டோபரில் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஏப்ரலில் வரவிருக்கும் குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்லுறவு உருவாகும். இது பதவி உயர்வுக்கும் வழிவகுக்கும், சம்பளமும் உயரும். சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். வருட இறுதியில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News