புதுடெல்லி: நவக்கிரங்களிலேயே சனீஸ்வரர் மிகவும் கோபக்காரர் என்று பெயர் பெற்றவர். கோபத்திற்கு மனிதர்கள் மட்டுமல்ல, தெய்வங்களும் கூட அஞ்சுகின்றன. வாழ்க்கை சீராக செல்ல, சனியின் அதிருப்தியில் இருந்து விலகி இருப்பது அவசியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் சனி அசுபமாக இருந்தால், அதைத் தவிர்க்க, கூடிய விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், சனி கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது. 


அவை ஒரு நபரின் ஆரோக்கியம், செல்வம், கௌரவம், வியாபாரம் ஆகியவற்றைக் கெடுக்கின்றன. ஒவ்வொரு வேலையிலும் தோல்வியும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. வருடத்தில் சில விசேஷ நாட்களில் சனியின் பரிகாரங்களைச் செய்வது பன்மடங்கு பலன்களைத் தரும்.


சனியின் கோபத்தைத் தவிர்க்க ஆண்டின் கடைசி சனிக்கிழமையான டிசம்பர் 25ம் தேதி மிகவும் உகந்தது. தற்செயலாக வரும் இந்த சிறப்பு நாளன்று, சனியின் தீங்கான பலனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.


சனிதேவனை மகிழ்விக்க, இந்த ஆண்டு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. 25 டிசம்பர் 2021 அன்று, சனியின் கோபத்திலிருந்து விடுபட மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு தற்செயல் நிகழ்வு நடைபெறுகிறது. டிசம்பர் 25 சனிக்கிழமை (December 25, Saturday), மார்கழி மாதம் ஒன்பதாம் நாள்.


வளர்பிறை நாளான இன்று சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும். இது தவிர காலை 11:23 வரை ப்ரீத்தி யோகம் இருக்கும். இதற்குப் பிறகு, இந்த நாளில் ஆயுஷ்மான் யோகம் வருகிறது. இந்த இரண்டு காலமும் சனீஸ்வரரின் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் சனி தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரங்கள் சாதாரண நாட்களை விட அதிக பலனைத் தரும்.


Also Read | சனி - சுக்கிரன் - புதன் கூட்டணியால் இந்த ‘3’ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை..!!!


சனிதேவனை மகிழ்விக்க இதுவே வழி


சனிபகவானை சாந்தப்படுத்த, டிசம்பர் 25-ம் தேதி சனிக்கிழமையன்று எளிதான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், சனிபகவானின் பார்வையினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். 


எனவே, டிசம்பர் 25ம் நாள் சனிக்கிழமையன்று கோவிலுக்கு சென்று சனீஸ்வரரை வணங்குங்கள். இந்த நேரத்தில் சனிபகவான் சிலைக்கு முன்னால் தவறுதலாகக்கூட நேராக நிற்காமல், சற்று வலப்புறமோ இடப்புறமோ நிற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது அவரது நேர்பார்வையில் படாமல் நின்று வணங்க வேண்டும்.


சனீஷ்வரருக்கு நல்லெண்ணெய் சாற்றி, அவருக்கு உரிய மந்திரங்கள் மற்றும் கோளாறு பதிகம் சொல்லி வணங்கவும். அதோடு, இந்த சிறப்பு நாளில் சனீஸ்வரருடன் தொடர்புடைய  ஏதாவது ஒன்றை தானம் செய்யுங்கள். இந்த சனிக்கிழமையன்று ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது நன்மைகளைத் தரும்.


(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை)


ALSO READ | பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR