சனி - சுக்கிரன் - புதன் கூட்டணியால் இந்த ‘3’ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை..!!!

மிதுன ராசிக்கு அதிபதி புதன். துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். கும்ப ராசிக்கு சனி அதிபதி. இந்த ராசிகளின் அதிபதிகள் வேறு வேறாக இருக்கலாம் என்றாலும், கிரகங்களின் தத்துவங்களில் ஒற்றுமை உண்டு.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2021, 05:53 PM IST
  • இந்த 3 ராசிகளும் காற்று தத்துவத்துடன் தொடர்புடையவை
  • கும்ப ராசிக்கு அதிபதி சனி.
  • துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன்.
சனி - சுக்கிரன் - புதன் கூட்டணியால் இந்த ‘3’ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை..!!! title=

புதுடெல்லி: ஜோதிடத்தில் அனைத்து 12 ராசிகளும் நான்கு தத்துவ கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு கூறுகள் காற்று, நீர், நெருப்பு மற்றும் பூமி. மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகியவை காற்று தத்துவதுடன் தொடர்புடையவை. இதில் மிதுன ராசிக்கு அதிபதி புதன், துலாம் ராசிக்கு சுக்கிரன் மற்றும் கும்ப ராசிக்கு அதிபரி சனி பகவான். இந்த ராசிகளின் அதிபதிகள் வேறு வேறாக இருக்கலாம் என்றாலும், கிரகங்களின் தத்துவங்களில் ஒற்றுமை உண்டு இதனுடன், சனி-சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிகின்றன

மிதுனம் (Gemini)

மிதுனம் காற்று தத்துவத்தின்  அடிப்படையிலான கிரகத்தை அதிபதியாக கொண்டது. இந்த ராசிக்கு அதிபதி கிரகம் புதன். புதன் கிரகம் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் கற்பனைத்திறன் உடையவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆற்றலை பயன்படுத்தி எல்லாவற்றிலும் முதலிடம் பெறுவார்கள். இது தவிர இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் சிறப்பு அருளும் உண்டு. இதன் காரணமாக அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பதால் எப்போதும் நிலைமை சாதகமாகவே இருக்கும்.

ALSO READ | கேது பெயர்ச்சி 2022: ‘இந்த’ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

துலாம் (Libra)

காற்று தத்துவத்தின்  அடிப்படையிலான கிரகத்தை அதிபதியாக கொண்ட   மற்றொரு ராசி துலாம். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசியில் சுக்கிரன் ஆதிக்கம் செலுத்துவதால், இந்த ராசிக்காரர்கள் கலை மற்றும் அழகில் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கிறார்கள். சுக்கிரனின் அருளால் இந்த ராசிக்காரர்கள் திரைத்துறையில் அபரிமிதமான முன்னேற்றம் அடைகிறார்கள். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் சில சமயங்களில் உணர்ச்சி வசப்படுவதன் மூலம் தவறான முடிவுகளை எடுப்பார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எப்பொழுதும் கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.

கும்பம் (Aquarius) 

ஜோதிடத்தில் கும்பம் சனியின் அடையாளமாக கருதப்படுகிறது. காற்று தத்துவத்தின்  அடிப்படையிலான கிரகத்தை அதிபதியாக கொண்ட  இந்த ராசியின் தெய்வம் சனி தேவன். இந்த ராசியில் சனி வலுவாக உள்ளது. கடவுளின் அருளால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் துணை நிற்கும். ஒவ்வொரு வேலையிலும் அவர்கள்தான் முதலிடம். பல சமயங்களில் இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை தவறாக மதிப்பிடுவதால்,.சில சமயங்களில் அவர்களுக்குப் பிரச்சனையாகிவிடுகிறது. இருப்பினும், இந்த பழக்கத்தை கட்டுப்படுத்திக்  கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News