அனுமனை விரதம் இருந்து வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுமன் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வணங்கலாம். அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம்.


பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வந்தால். 


காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.


இந்நிலையில் இன்று அனைத்து அனுமன் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. அனுமனுக்கு அதிகாலை, 5:00 மணி முதல் காலை, 9:00 மணிக்குள் சிறப்பு யாகம், நிறைவேள்வி, மகா அபிேஷகம் நடபெற்றது. மேலும் அனுமனுக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம், வடைமாலை சாத்துதல், மகாதீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.