உலகத்திலேயே அதிக அளவு விற்பனையாகும் விளையாட்டு பொருட்கள் பொம்மைகள் தான். அதிலும், லெகோ, பார்பி பொம்மைகள் என்றால் குழந்தைகள் அதிக அளவு விரும்புவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய காலங்களில் இந்த பொம்மைகள் கல், களிமண், மரம், தந்தம், தோல், மெழுகு என பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டனர். அதன் பின்னர், குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் கை, கால் இணைப்புடன் அசைக்கும் வகையில் பொம்மைகள் உருவாக்கப்பட்டனர். 
 
இந்த பொம்மைகள் தான் அனைத்து குழந்தைகளில் தோழி மற்றும் குழந்தைகளின் செல்ல பிள்ளையாகவும், காட்சியளிக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க பொம்மைகளை கொண்டு, நீயும் பொம்மை, நானும் பொம்மை நினைச்சி பார்த்தா எல்லாம் பொம்மை" என்று, கவிஞர்கள் ஏராளமாக பாடல் வரிககளை உருவாக்கியுள்ளனர். 


சில பொம்மைகள் நகைச்சுவை குறும்போடு பார்ப்பவர் கண்ணை கவரும் வண்ணம் காட்சியளிக்கும். இத்தகைய பொம்மைகளை கொண்டு இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். 


பொம்மைகளைப் பிடிக்காத குழந்தைகள் யாரும் உண்டா? தூங்கும்போது கூட தங்களது பொம்மைகளை விட்டுப் பிரிய மனமில்லாத குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், இன்றைய கால கட்டத்தில் எலக்ட்ரானிக் பொம்மைகளே அதிகம் கிடைக்கின்றன. இந்தப் பொம்மைகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை எனவே மரத்தலான, பயன் தரும் பொம்மைகளை பெறோர்கள் குழந்தைகளுக்கு வாங்கி தருவது அவசியம்.