தக்காளி விலை எப்போது குறையும்: தக்காளியின் விலை பெருமளவில் உயர்ந்து நம் செலவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஒரு கிலோவுக்கு 20-30 ரூபாயாக இருந்த தக்காளி விலை கடந்த சில வாரங்களில் 110-160 ரூபாயாக உயர்ந்துள்ளது. இப்படி விலை உயர்ந்தால் சாமானியர்களின் சமையல் அறையில் இருந்து தக்காளி காணாமல் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. தக்காளி விலை ஏன் விண்ணைத் தொடுகிறது, எப்போது குறையும்? தக்காளியின் விலை தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை இங்கே பாப்போம்.  ஜூன் மாதத்தில் தக்காளியின் சில்லறை விலை சுமார் 38.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தக்காளியின் மொத்த விற்பனை விலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த காலகட்டத்தில், தக்காளியின் மொத்த விற்பனை விலை 45.3 சதவீதம் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தக்காளி விலை உயர்வு ஏன்? பியூஷ் கோயல் விளக்கம்


 


தக்காளியின் விலை ஏன் இவ்வளவு பெரிய உயர்வு? தக்காளி விளைச்சல் குறைந்ததே இதற்குக் காரணம் என்று அனைத்து அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 2021-22ல் தக்காளி உற்பத்தி 20,694 ('000 மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது 2022-23ல் 0.4 சதவீதம் குறைந்து 20,621 ('000 மெட்ரிக் டன்) ஆக உள்ளது.  மாநிலங்களின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மொத்த தக்காளி உற்பத்தியில் 51.5 சதவீதம் உள்ளது. குஜராத் போன்ற மாநிலங்களில் உற்பத்தி 23.9 சதவீதமும், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரில் உற்பத்தி சுமார் 20 சதவீதமும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் தக்காளியின் விலை திடீரென உயர்ந்துள்ளது.


ஜூலை - நவம்பர் விளைச்சல் சீசன் வருவதால் தக்காளி விலை குறையலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி. ரபி தக்காளி பயிருக்கு அறுவடை காலம் டிசம்பர்-ஜூன் ஆகும், வெப்ப அலைகள் அல்லது ஒழுங்கற்ற மழைப்பொழிவு பயிரை பாதிக்கலாம், எனவே திடீரென விலை ஏற்றம். ஜூலை-நவம்பர் விளைச்சல் சீசன் வருவதால் தக்காளி விலை குறையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  துறைவாரியான தரவுகளின்படி, ஜூன் 27ஆம் தேதி, அகில இந்திய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.46 ஆக இருந்தது. மாடல் விலை கிலோ ரூ.50 ஆகவும், அதிகபட்ச விலை கிலோ ரூ.122 ஆகவும் இருந்தது. நான்கு பெருநகரங்களில், தக்காளியின் சில்லறை விலை டெல்லியில் கிலோ ரூ.60 ஆகவும், மும்பையில் ரூ.42 ஆகவும், கொல்கத்தாவில் கிலோ ரூ.75 ஆகவும், சென்னையில் கிலோ ரூ.67 ஆகவும் இருந்தது.  மற்ற முக்கிய நகரங்களில் பெங்களூரில் கிலோ ரூ.52 ஆகவும், ஜம்முவில் கிலோ ரூ.80 ஆகவும், லக்னோவில் ரூ.60 ஆகவும், சிம்லாவில் ரூ.88 ஆகவும், புவனேஸ்வரில் ரூ.100 ஆகவும், ராய்ப்பூரில் ரூ.99 ஆகவும் இருந்தது.


மேலும் படிக்க | கரூரில் குவாரி, கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்-காரணம் என்ன..?


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ