பலதரப்பட்ட நிலப்பரப்புகளைக் கொண்ட இந்தியா, பயணிகளின் இதயங்களைக் கவரும் பல சுற்றுலா தளங்களை கொண்டுள்ளது.  கோவில்கள், மாளிகைகள், வரலாற்று சிற்பங்கள், மலைகள் என பலவற்றை கொண்டுள்ளது. இந்தியாவில் மலை பிரதேசங்கள் அதிகம் உள்ளன.  இந்த மலை தலங்கள் அமைதியான காலநிலை முதல் சாகசங்கள் வரை பல்வேறு அனுபவங்களை வழங்குகின்றன. குடும்பத்துடன், நண்பர்களுடனும், காதலியுடனும் நிச்சயம் இந்த இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருப்போம்.  எனவே, இந்தியாவில் உள்ள பின்வரும் டாப் 10 மலைகளுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று அதனை அனுபவித்து விடுங்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்லா (Shimla), இமாச்சல பிரதேசம்


"ஹில் ஸ்டேஷன்களின் ராணி" என்று அழைக்கப்படும் சிம்லா காலனித்துவ கட்டிடக்கலை, மால் ரோடு ஷாப்பிங் மற்றும் இமயமலையின் பரந்த காட்சிகளைக் கொண்டுள்ளது. மேலும் அங்கு ரிட்ஜ் மற்றும் கிறிஸ்ட் தேவாலயத்தை நிச்சயம் பார்வையிட வேண்டும்.


மணாலி (Manal), இமாச்சல பிரதேசம்


குலு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மணாலி, சாகச ஆர்வலர்களுக்கு மலையேற்றம் மற்றும் பனிச்சறுக்கு போன்ற செயல்களுக்கு பெயர்பெற்றது.  சோலாங் பள்ளத்தாக்கு மற்றும் ரோஹ்தாங் கணவாய் ஆகியவை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.


மேலும் படிக்க |  50 ரூபாயில் PVC ஆதார் அட்டை... கிழியாது... சேதம் ஆகாது... விண்ணப்பிக்கும் முறை!


குல்மார்க் (Gulmarg), ஜம்மு மற்றும் காஷ்மீர்


குல்மார்க் அதன் புல்வெளிகள் மற்றும் பனி மூடிய சிகரங்கள், பனிச்சறுக்கு மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கமாகும். குல்மார்க் கோண்டோலா உலகின் மிக உயரமான கேபிள் கார்களில் ஒன்றாகும்.


கொடைக்கானல் (Kodaikanal), தமிழ்நாடு


கொடைக்கானல் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தளம் ஆகும்.  மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை காற்று, பைன் காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அமைதியான ஏரிகளுக்கு பெயர் பெற்றது. பலரின் விருப்பமான இடமாக கொடைக்கானல் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் உள்ளது கொடைக்கானல். கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி, பெரிஜம் ஏரி, பூம்பாறை, தூண் பாறைகள், பைன் காடு, மன்னவனூர் ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் போன்ற இடங்களை சுற்றி பார்க்கலாம்.


மூணாறு (Munna), கேரளா


கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், மூணாறு அதன் பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட இடம் இது ஆகும்.  எக்கோ பாயிண்ட், பொதமேடு காட்சி முனை, இரவிகுளம் தேசிய பூங்கா, டாடா டீ மியூசியம், வொண்டர் வேலி அட்வென்ச்சர் & கேளிக்கை பூங்கா, சீயப்பாரா நீர்வீழ்ச்சி, ஆட்டுக்காடு நீர்வீழ்ச்சி, குண்டலா ஏரி, சின்னார் வனவிலங்கு சரணாலயம் போன்ற சுற்றுலா தளங்கள் உள்ளது.


ஊட்டி (Ooty), தமிழ்நாடு


ஊட்டி அல்லது உதகமண்டலம் பெரும்பாலும் "நீலகிரியின் ராணி" என்று அழைக்கப்படுகிறது. தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி மற்றும் நீலகிரி மலை ரயில் ஆகியவை பிரபலமான இடங்கள்.


டார்ஜிலிங் (Darjeeling), மேற்கு வங்காளம்


தேயிலை தோட்டங்கள் மற்றும் டார்ஜிலிங் ஹிமாலயன் இரயில்வேக்கு புகழ் பெற்ற இந்த மலைவாசஸ்தலம் காஞ்சன்ஜங்கா மலைத்தொடரின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளது. ஒரு தனித்துவமான அனுபவத்திற்காக பொம்மை ரயிலில் சவாரி செய்து பாருங்கள்.


முசோரி (Mussoorie), உத்தரகாண்ட்


கர்வால் இமயமலையில் அமைந்துள்ள முசோரி, அமைதியான இடத்திற்கு பெயர்பெற்றது. கெம்ப்டி நீர்வீழ்ச்சி மற்றும் மால் சாலை ஆகியவை கண்டுகளிக்க ஏற்ற இடங்கள் ஆகும்.


நைனிடால் (Nainital), உத்தரகாண்ட்


மலைகளால் சூழப்பட்ட நைனிடாலின் நைனி ஏரி அதன் மையப் பகுதியாகும். ஏரியில் படகு சவாரி அல்லது ஆன்மீக அனுபவத்திற்காக நைனா தேவி கோயிலுக்குச் செல்லலாம்.


கூர்க் (Coorg), கர்நாடகா


"இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க், அதன் காபி தோட்டங்கள், பசுமையான காடுகள் மற்றும் இனிமையான காலநிலைக்கு பெயர் பெற்றது. அபே நீர்வீழ்ச்சியும், ராஜாவின் இருக்கை காட்சியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.


மேலும் படிக்க | பட்ஜெட் 2024... மூத்த குடிமக்களுக்கு 50% ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் கிடைக்குமா..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ