TOP 10 IPO: இவைதான் இந்தியாவின் 10 மிகப்பெரிய ஐபிஓக்கள்
அரசு காப்பீட்டு நிறுவனத்தின் ஐபிஓவுக்காக முதலீட்டாளர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட காப்பீட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எல்ஐசி ஐபிஓ: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) முதலீட்டாளர்களின் காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. வரும் மே 4ம் தேதி எல்ஐசி-ஆரம்ப பொது சலுகை (ஐபிஓ) சந்தாவிற்காக திறக்கப்படுகிறது. இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட காப்பீட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐபிஓ வருவதற்கு முன்பே, இது குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எல்ஐசியின் ஐபிஓ அறிவிப்புக்குப் பிறகு, 6.48 பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்பதிலிருந்தே இதை தெரிந்துகொள்ள முடிகிறது. இதற்கிடையில் மே 4ம் தேதி தொடங்கவுள்ள பங்கு வெளியீடானது, மே 9ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை 902 ரூபாயில் இருந்து 949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LIC IPO மே 4 ஆம் தேதி வெளியீடு தொடங்குகிறது: ஒரு பங்கின் விலை இதுதான்
பேடிஎம் ஐபிஓ: எல்ஐசி ஐபிஓ வருவதற்கு முன்பு, ஃபின்டெக் தளமான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பெயரில் நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ பதிவு செய்யப்பட்டது. இந்த ஐபிஓ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.18,300 கோடி ஆகும். இருப்பினும், இந்த ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஐபிஓவில் வெளியீட்டு விலையான ரூ.2,150 உடன் ஒப்பிடும்போது பேடிஎம் பங்கு 9 சதவீத தள்ளுபடியுடன் ரூ.1,955-ல் பட்டியலிடப்பட்டது.
கோல் இந்தியா ஐபிஓ: கோல் இந்தியாவின் ஐபிஓ 2010 இல் வந்தது, பின்னர் அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனம் ஐபிஓ மூலம் சந்தையில் இருந்து ரூ.15,000 கோடிக்கு மேல் திரட்டியது. இந்த ஐபிஓ முதலீட்டாளர்களின் ஆதரவையும் பெற்றது. கோல் இந்தியாவின் ரூ.15,199 கோடி ஐபிஓவுக்குப் பிறகு, அதன் பங்கு வெளியீட்டு விலையான ரூ.245 உடன் ஒப்பிடும்போது 17 சதவீத பிரீமியத்துடன் ரூ.288 இல் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ரிலையன்ஸ் பவர் ஐபிஓ: அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் பவர் லிமிடெட் பிப்ரவரி 2008 இல் ஐபிஓவுடன் மார்க்கெட்டில் வந்தது. இதன் ஐபிஓ மதிப்பு ரூ.11,563 கோடி ஆகும். ஐபிஓவுக்குப் பிறகு, நிறுவனத்தின் பங்கு 22 சதவீத பிரீமியத்துடன் ரூ.548 இல் பட்டியலிடப்பட்டது. இதன் வெளியீட்டு விலை 450 ரூபாய் ஆகும்.
ஜிஐசி ஐபிஓ: இந்த அரசாங்க காப்பீட்டு நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளது. ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அதாவது ஜிஐசி இந்தியாவின் ஐபிஓ அக்டோபர் 2017 இல் வந்தது. அதன் ஐபிஓ மதிப்பு ரூ.11,176 கோடி ஆகும். இருப்பினும், வெளியீட்டு விலையான ரூ.912 உடன் ஒப்பிடுகையில், அதன் பட்டியல் தள்ளுபடியுடன் செய்யப்பட்டது. ஜிஐசி இந்தியாவின் பங்கு 7 சதவீத தள்ளுபடியுடன் ரூ.850க்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
எஸ்பிஐ கார்டு ஐபிஓ: நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐயின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸ் லிமிடெட் பங்குகள் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் பட்டியலிடப்பட்டது. நிறுவனம் மார்ச் 2020 இல் ரூ.10,355 கோடி ஐபிஓவுடன் வெளிவந்தது. ஐபிஓவில் வெளியீட்டு விலை ரூ.755 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், இந்த பங்கு சந்தையில் 13 சதவீதம் நஷ்டத்துடன் ரூ.658க்கு பட்டியலிடப்பட்டது.
மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஐபிஓ: தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய பொது காப்பீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஐபிஓ நவம்பர் 2017 இல் வந்தது மற்றும் அதன் மதிப்பு ரூ.9,600 கோடி ஆகும். இதன் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.800 உடன் ஒப்பிடும்போது 6 சதவீத தள்ளுபடியுடன் ரூ.749க்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ஜொமேட்டோ ஐபிஓ: ஜொமேட்டோவின் ஐபிஓ கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளி வந்தது மற்றும் அதன் மதிப்பு ரூ.9,375 கோடியாக இருந்தது. பின்னர், பங்குச் சந்தையில் அதன் செயல்திறன் சிறப்பாக இல்லாவிட்டாலும், அதன் பட்டியல் பம்பரமாக இருந்தது. ஜொமேட்டோ பங்கு வெளியீட்டு விலையான ரூ.76ஐ விட 51 சதவீத பிரீமியத்துடன் ரூ.115க்கு பட்டியலிடப்பட்டது.
டிஎல்எஃப் ஐபிஓ: டிஎல்எஃப் நிறுவனத்தின் ஐபிஓ மதிப்பு ரூ.9,188 கோடி ஆகும். டிஎல்எஃப் லிமிடெட் ஜூலை 2007 இல் ஐபிஓ உடன் வெளிவந்தது. ஐபிஓவுக்குப் பிறகு, டிஎல்எஃப் பங்குச் சந்தையில் 11 சதவீத பிரீமியத்துடன் ரூ.582 இல் பட்டியலிடப்பட்டது. இதன் வெளியீட்டு விலை 525 ரூபாய் ஆகும்.
ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் ஐபிஓ: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் ஐபிஓ நவம்பர் 2017 இல் வெளி வந்தது. அதன் ஐபிஓ மதிப்பு ரூ.8,695 கோடி ஆகும். இந்த ஐபிஓவின் வெளியீட்டு விலை ரூ.290 ஆக இருந்தது, இதற்குப் பிறகு ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் பங்கு 7 சதவீத லாபத்துடன் ரூ.311-ல் பட்டியலிடப்பட்டது.
மேலும் படிக்க | LIC IPO: காத்திருப்பு முடிவடைந்தது, இந்த தேதியில் வெளியாகிறது எல்ஐசி ஐபிஓ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR