LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்

LIC IPO: பொது வெளியீட்டின் ஆஃபரில் 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கும், 5 சதவீதம் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஒதுக்கப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2022, 01:53 PM IST
  • பாலிசிதாரர்கள் இன்னும் எல்ஐசி பாலிசி-ஐ பான் உடன் இணைக்கவில்லை என்றால், பிப்ரவரி 28, 2022க்கு முன் இதைச் செய்ய வேண்டும்.
  • பிப்ரவரி 13, 2022 அன்று அல்லது அதற்கு முன் எல்ஐசி பாலிசிகளை வாங்கிய பாலிசிதாரர்கள் மட்டுமே பாலிசிதாரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
  • LIC பாலிசிதாரர்களும் LIC ஊழியர்களும் சில்லறை விற்பனை பிரிவின் கீழும் விண்ணப்பிக்கலாம்.
LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் title=

எல்ஐசி ஐபிஓ: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மூலம் டிராஃப்ட் ரெட் ஹ்ர்ரிங் பிராஸ்பெக்டஸ் (டிஆர்எஹ்பி) தாக்கல் செய்யப்பட்ட பிறகு, எல்ஐசி ஐபிஓ-வுக்கான (ஆரம்ப பொதுப் பங்குகள்) செபியின் ஒப்புதலுக்காக சந்தை ஆவலுடன் காத்திருக்கிறது. பொது வெளியீட்டின் ஆஃபரில் 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கும், 5 சதவீதம் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஒதுக்கப்படும். 

ஆகையால் சில்லறை முதலீட்டாளர்கள் தவிர, ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களும் எல்ஐசி ஐபிஓ வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர். இருப்பினும், எல் ஐ சி ஐபிஓ வெளியீட்டிற்கு முன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொது வெளியீடு தொடர்பாக சில்லறை முதலீட்டாளர்கள், பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள் உள்ளன.

பாலிசிதாரர்கள், ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கியமான எல்.ஐ.சி ஐபிஓ விவரங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:

1] எல்ஐசி பாலிசிதாரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 10 சதவீத ஒதுக்கிட்டை பயன்படுத்திக்கொள்ள அவர்களது எல்ஐசி பாலிசி மற்றும் பான் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும். எல் ஐ சி பாலிசி மற்றும் பான் இணைப்பு பற்றி நேரடி எல் ஐ சி இணைப்பான linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus இல் லாக் இன் செய்து  தெரிந்துகொள்ளலாம்.

பாலிசிதாரர்களின் எல்ஐசி பாலிசி பான் உடன் இணைக்கப்படவில்லை என்றால், பிப்ரவரி 28, 2022க்கு முன் இதைச் செய்ய வேண்டும். நேரடி LIC இணைப்பான linkpan.licindia.in/UIDSeedingWebApp இல் லாக் இன் செய்து ஆன்லைனில் இதைச் செய்யலாம்.

2] பிப்ரவரி 13, 2022 அன்று அல்லது அதற்கு முன் எல்ஐசி பாலிசிகளை வாங்கிய பாலிசிதாரர்கள் மட்டுமே பாலிசிதாரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

3] எல்ஐசி துவக்க நிலை ஆஃபரில், 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதாவது எல்ஐசியின் ஊழியர் அல்லது எல்ஐசி பாலிசிதாரர்களாக இல்லாதவர்கள் இந்த வகையின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | LIC IPO: முதலீட்டு வாய்ப்பை தவற விடாமல் இருக்க இன்றே பான் எண்ணை அப்டேட் செய்யவும்!

4] LIC பாலிசிதாரர்களும் LIC ஊழியர்களும் சில்லறை விற்பனை பிரிவின் கீழும் விண்ணப்பிக்கலாம். 

5] ஒரு சில்லறை முதலீட்டாளர் இந்த எல் அக் சி ஐபிஓ-வில் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 

6] எல்ஐசி பாலிசிதாரர் எல்ஐசி ஐபிஓவில் அதிகபட்சம் ₹2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். எல்ஐசி ஊழியர்களும் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம்.

7] எல்ஐசியில் வேலை செய்யாத எல்ஐசி பாலிசிதாரர்கள் அதிகபட்சமாக ₹4 லட்சம் (பாலிசிதாரர் பிரிவின் கீழ் ₹2 லட்சம், சில்லறை வகையின் கீழ் ₹2 லட்சம்) முதலீடு செய்யலாம்.

8] எல்ஐசி ஐபிஓவில் எல்ஐசி ஊழியர் செய்யக்கூடிய அதிகபட்ச முதலீடு ₹6 லட்சம் ஆகும். அதற்கு அவரிடம் எல்ஐசி பாலிசியும் இருக்க வேண்டும். (எல்ஐசி ஊழியர் பிரிவில் ₹2 லட்சம், பாலிசிதாரர் பிரிவில் ₹2 லட்சம், சில்லறை வகையின் கீழ் ₹2 லட்சம்).

9] கூட்டு டிமேட் கணக்காக இருந்தால், எல்ஐசி பாலிசிதாரர் முதன்மை டிமேட் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் மட்டுமே ஒதுக்கீட்டின் பலனைக் கோர முடியும். எனவே, பாலிசிதாரர்கள் முதன்மை டிமேட் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால் மட்டுமே ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். இல்லையெனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

10] கூட்டு பாலிசிதாரர்களாக இருந்து, இருவருக்கும் தனித்தனி டிமேட் கணக்கு இருந்தால், பாலிசிதாரர்களின் பிரிவின் கீழ் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | LIC IPO வெளியீட்டுக்கு முன் பெரிய அதிர்ச்சி: நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News