அனைவராலும் எடுக்கப்படும் டாப் 10 புத்தாண்டு தீர்மானங்கள்!
புத்தாண்டு தினத்தில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை( resolution) நிறைவேற்ற வேண்டுமெனில் இந்த முறைகளை பின்பற்றினாலே போதுமானது.
புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் ஒரு புத்துணர்வு உண்டாகும். ஒவ்வொரு புது வருடமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று பலரும் அந்த நாளை கொண்டாடி வரவேற்கின்றனர். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புத்தாண்டிற்கும், ஒவ்வொரு வகையான தீர்மானங்களை( resolution) எடுத்து அதனை நிறைவேற்றும் நோக்கில் செயல்பட திட்டமிடுவர். ஒவ்வொருவருக்கும் உள்ள கனவுகளை நிறைவேற்றும் வகையில் அவர்களது அந்த வருட தீர்மானங்கள் (resolution) இருக்கும். அதன்படி அனைவரும் பொதுவாக எடுக்கும் தீர்மானகளவான:
ALSO READ | Banks Working days: 2022 ஜனவரியில் 15 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்
1) அதிகமாக உடற்பயிற்சி செய்தல்.
2) உடல் எடையை குறைத்தல் .
3) சோம்பேறித்தனத்தை குறைத்தல்
4) புதிய திறமைகள் அல்லது பொழுதுபோக்கை கற்றுக்கொள்ளுதல்.
5) வாழ்க்கையை முழுமையாக வாழ்தல்.
6) அதிக பணத்தை சேமித்தல்/ குறைவான பணத்தை செலவிடுதல்.
7) புகைப்பழக்கத்தை நிறுத்துதல்.
8) குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடுதல்.
9) அதிகமாக பயணம் செய்தல்.
10) அதிகமாக படித்தல்.
ஒவ்வொரு புத்தாண்டின் போதும் ஒவ்வொருவரும் தங்களது திட்டங்களை செயல்படுத்த போராடுகின்றனர். ஒரு ஆய்வின்படி, எடுத்த தீர்மானங்களை( resolution) நிறைவேற்றுவதில் 46% பேர் தான் அதை சிறப்பாக செய்கின்றனர், மற்றவர்கள் இதனை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்து விடுகின்றனர். அவ்வாறு தோல்வியுறாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். இனி எவ்வாறு நாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்களை( resolution) நிறைவேற்றுவது என்பது குறித்து பார்ப்போம்.
1) மாற்றங்களை ஏற்க மனதளவில் தயாராக வேண்டும் :
நீங்கள் வாழ்க்கையில் சிறிய அளவில் சாதித்து இருந்தாலும், அவற்றை பெரிதாக நினைத்து கொண்டாட வேண்டும். நீங்கள் செயல்படுத்த விரும்பும் மாற்றங்களை செய்யும் முன் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.
*நேர்மறையாக எண்ணுங்கள்.
*சீக்கிரமே ஒரு மாற்றத்தை செய்யாதீர்கள்.
*படிப்படியாக மாற்றங்களை உருவாக்குங்கள்.
*தவறுகளை சரிசெய்யுங்கள்.
2) உங்களை ஊக்குவிக்கும் இலக்கை அமையுங்கள் :
நீங்கள் வைத்திருக்கும் இலக்கு மதிப்புமிக்கதாக உள்ளதா மற்றும் பயனுள்ளதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இலக்குகளை வரிசைப்படுத்தி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இவ்வாறு செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, இலக்கை அடைவதற்கான உந்துதலையும் தரும்.
3) தீர்மானங்களுக்கு எல்லைகளை வைக்கவும் :
முதலில் குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். வெவ்வேறு மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், சத்தான உணவை உண்ணுங்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள், இலக்குகளை முக்கியத்துவம் கொடுங்கள்.
4) உங்கள் தீர்மானங்களை அடுத்தவர்களிடம் கூறுங்கள் :
உங்களது தீர்மானங்களை அடுத்தவர்களிடம் கூற வேண்டும். அவ்வாறு அதனை நிறைவேற்றாமல் விட்டால் அவர்கள் கேலி செய்வார்கள் என்று பயந்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு உருவாகும். மேலும் நீங்கள் எடுத்த தீர்மானங்களை போலவே மற்றவர்களும் எடுத்திருந்தால் இருவரும் சேர்ந்தே அதனை நிறைவேற்ற போராடலாம்.
5) உங்கள் இலக்குகளை எழுதி வையுங்கள் :
உங்கள் மனதில் இருக்கும் இலக்குகளை முதலில் தெளிவாக கண்களில் படும்படியாக எழுதி வையுங்கள். அவற்றை பார்க்கும்பொழுது இதனை நிறைவேற்றிவிட்டு வேண்டும் என்றும் உங்களுக்குள்ளேயே ஒரு உத்வேகம் எழும்.
ALSO READ | உடனே முந்துங்கள்! அமேசானில் குறைந்த விலையில் நிறைவான பொருட்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR