Post Office: மாதம் ரூ 5000 முதலீடு; 15 ஆண்டுகளில் 16.25 லட்ச ரூபாய் தரும் சூப்பர் திட்டம்
சிறு சேமிப்பு திட்டங்களில், தபால் அலுவலக சேமிப்புமுக்கிய பங்கு வகிக்கிறது.
புதுடெல்லி: பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF மிகவும் சிறந்த சேமிப்புத் திட்டமாகும், இதன் மூலம் நீங்கள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்யலாம். எதிர்காலத்திற்கான ஒரு பெரிய தொகையை சேமிக்கலாம்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டம்:
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் அஞ்சல் அலுவலகத் திட்டமாகும். 15 ஆண்டுகள் வரை சேமிக்கும் இந்த திட்டத்தில் ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதோடு, முறையான முதலீட்டுத் திட்டம் அதாவது SIP போன்ற மாதாந்திர முதலீட்டு வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டு வட்டியானது, FD அல்லது RD ஐ விட அதிகமாக உள்ளது. நாம் செய்ய உத்தேசிக்கும் முதலீட்டில் இதிலும் கொஞ்சம் செய்தால், எதிர்காலத் தேவைகளுக்காக கணிசமாக சேமிக்கலாம். இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு வருமானத்திற்கும் வரி விலக்கு உண்டு.
PPF கால்குலேட்டர்: மாதம் ரூ.5000 முதலீடு
மாத சேமிப்பு: ரூ 5000
வருடத்தின் மொத்த வைப்புத்தொகை: ரூ.60,000
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1 சதவீதம் கூட்டு வட்டி
15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை: ரூ 16.25 லட்சம்
மொத்த முதலீடு: 9 லட்சம்
வட்டி பலன்: ரூ.7.25 லட்சம்
READ ALSO | பழைய ரூபாய் நோட்டு, நாணய விற்பனை பற்றிய எச்சரிக்கை!!
PPF கால்குலேட்டர்: மாதம் ரூ.10,000 முதலீடு
மாத சேமிப்பு: ரூ 10,000
வருடத்தின் மொத்த வைப்புத்தொகை: ரூ 1,20,000
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1 சதவீதம் கூட்டு வட்டி
15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை: ரூ 32.55 லட்சம்
மொத்த முதலீடு: 18 லட்சம்
வட்டி பலன்: ரூ.14.55 லட்சம்
PPF இல் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரிலும் PPF கணக்கைத் தொடங்கலாம். இருப்பினும், மைனராக இருக்கும் சிறார், மேஜர் ஆகும் வரை பாதுகாவலர் தான் கணக்கைக் பராமரிக்க வேண்டும்.
திட்டத்தின் முதிர்வு 15 ஆண்டுகள், ஆனால் முதிர்வடைந்த பிறகும் 5-5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
அரசாங்க சேமிப்பு திட்டமாக இருப்பதால், இந்த முதலீட்டுக்க பாதுகாப்பு கிடைக்கும். இதில், கிடைக்கும் வட்டிக்கு உத்தரவாதம் உண்டு.
சந்தாதாரர்கள் PPF கணக்கின் மீது தகுந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம். கடன் பலன் கணக்கைத் திறப்பதன் மூலம், மூன்றாவது மற்றும் ஆறாவது ஆண்டுகளில் கடனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரிச் சலுகை
பொது வருங்கால வைப்பு நிதி IT சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. இதில், திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். PPF இல் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு கிடைக்கும்.
ALSO READ | பாம்பு சட்டை உரித்ததை பார்த்திருக்கிறீர்களா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR