திருப்பதியில் புதிய விதிமுறைகள் அமல்- அவதிபடும் பக்தர்கள்!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருப்பதிக்கு பக்தர்கள் செல்ல தேவஸ்தானம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
திருப்பதியில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருப்பதிக்கு பக்தர்கள் செல்ல தேவஸ்தானம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதிக்கு (Tirupati) செல்லும் பக்தர்களுக்கு புதிய விதிமுறைகளை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. மறுநாள் தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முந்தைய நாள் மதியம் 1 மணிக்கு பிறகு அலிபிரி சாலை வழியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Also Read | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
மறுநாள் தரிசன டோக்கன் பெற்று நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு, முந்தைய நாள் காலை 9 மணிக்கு பிறகு நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளால் பக்தர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய விதிமுறைகளை பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) கூறியதாவது.
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கு பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR