துளசி செடியின் மகிமை; வீட்டின் வறுமை நீங்கி செல்வம் செழிக்கும்!
இந்து மதத்தில் தெய்வீக செடியாக திகழும் துளசி செடியின் இலைகள் ஒவ்வொரு வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் துளசியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
இந்து மதத்தில் தெய்வீக செடியாக திகழும் துளசி செடியின் இலைகள் ஒவ்வொரு வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் துளசியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை
துளசி அன்னை மகாலட்சுமிக்கும், விஷ்ணுவுக்கும் மிகவும் பிடித்தமானது. விஷ்ணு பகவானுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்வதால் மகிழ்ச்சி அடைகிறார். துளசி அன்னையை மகிழ்வித்தால், அனைத்து வகையான நிதி சிக்கல்களும் நீங்கும். துளசி பூஜையில் என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்நாளில் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது
சாஸ்திரங்களின்படி குறிப்பிட்ட நாட்களில் துளசி இலைகளை பறிக்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவற்றின் போது துளசி இலைகளை பறிக்கக்கக்கூடாது.
மேலும் படிக்க | விரைவில் இந்த 2 ராசிக்காரர்கள் சனிபகவானின் பிடியில் சிக்குவார்கள்
துளசி வழிபாடு வீட்டில் மகிழ்ச்சியைத் தரும்
மாலையில் துளசியின் கீழ் தீபம் ஏற்றினால் லட்சுமி மகிழ்வாள். மேலும், அவரது அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும். வீட்டின் முற்றத்தில் துளசி செடியை நட்டால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடி எதிர்மறை சக்தியை அழிக்கிறது. மேலும், வீட்டில் பணம் எப்போதும் தங்கி இருக்கும். அதுமட்டுமின்றி, துளசி செடி குடும்பத்தை திருஷ்டியில் இருந்து பாதுகாக்கிறது.
வாடிய துளசி செடியை வீட்டில் வைக்காதீர்கள்
வாடிய துளசி செடியை வீட்டில் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. வீட்டில் துளசி செடி காய்ந்திருந்தால், அதை புனித நதி அல்லது குளத்தில் அல்லது நிர் நிலைகளில் விட வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனியின் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை, செல்வம் செழிக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR