Uber Corporate Shuttle: உலக மக்களை பாடாய் படுத்திய கொரோனா தொற்றுநோயின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், ஆன்லைன் கேப் சேவை வழங்குனரான ஊபர் (Uber), ஊழியர்களுக்காக ஒரு சிறப்பு கார்ப்பரேட் ஷட்டில் சேவையைத் தொடங்கியுள்ளது. இதில் ஊழியர்களை வீட்டிலிருந்து அலுவலகத்துக்கும், மீண்டும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கும் அழைத்து செல்லும் சேவையை நிறுவனம் வழங்குகிறது.


ஊபரின் சிறப்பு கார்ப்பரேட் ஷட்டில் சேவை


இந்த சிறப்பு டாக்சிகள் சுத்திகரிக்கப்பட்டு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று Uber கூறுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஏழு நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் ஷட்டில் என்பது Uber India பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கும் தனிப்பயனாக்கப்பட்ட பயண சேவையாகும். இந்த சேவையில், ஒரு காரில் 10-50 பேர் அமரும் வசதி உள்ளது.


நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும்


நம்பகமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான பயணத்தை உறுதி செய்ய, Uber இன் முக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சேவை நிறுவனங்கள் (Service Sector) தங்கள் இலக்கை அடைய முடிகிறது என்று இந்த நிறுவனங்கள் சார்பில் அளிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரங்களில் வாகன நெரிசல் குறைகிறது, மாசு குறைகிறது பார்க்கிங் இடங்களுக்கான தட்டுப்பாடு நீங்குகிறது என நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: Mobile App இல்லாமல் ஓலா, ஊபர் வண்டிகளை புக் செய்யலாம்: எளிய வழிமுறைகள் இதோ


பாதுகாப்புக்கு முதல் முன்னுரிமை


இந்த சேவையில் பாதுகாப்புக்கே முதலிடம் என்றும் அதை விட முக்கியம் வேறெதுவும் இல்லை என்றும், இந்த சேவை முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது என்றும் Uber சார்பில் கூறப்பட்டுள்ளது. இதில் கோ ஆன்லைன் சரிபார்ப்பு பட்டியல், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான கட்டாய மாஸ்க் (Facemask) பாலிசி, டிரைவர்களுக்கான ப்ரீ-ட்ரிப் மாஸ்க் சரிபார்ப்பு செல்ஃபிகள் மற்றும் SOP-ல் உள்ள கட்டாய ஓட்டுனர் திறன் ஆகியவை அடங்கும்.


'Uber மாறும் தேவைகளை பூர்த்தி செய்யும்'
ஊபர் கார்ப்பரேட் ஷட்டில் அறிமுகம் குறித்து, இந்தியா மற்றும் தெற்காசியாவில் ஊபர் ஃபார் பிசினஸ் தலைவர் அபிநவ் மிட்டு, “ஊபரில், எங்கள் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். Uber கார்ப்பரேட் ஷட்டில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முதலிடம் கொடுக்க உதவுகிறது. போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் மற்றும் கார் பராமரிப்பு செலவுகள் இல்லாமல் ஊழியர்கள் பாதுகாப்பாக பணிக்கு சென்று வருகிறார்கள்.” என்று கூறினார்.


20 கடினமான மாதங்களுக்குப் பிறகு இந்தியர்கள் மீண்டும் பாதுகாப்பாக வேலைக்குச் செல்வதை உறுதிபடுத்த எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை கவுரவமாக கருதுகிறோம்.


இந்தியாவில் தொடங்கப்பட்ட ஊபரின் உயர் திறன் கொண்ட வாகனத் திட்டத்தின் முதல் கட்டம் இது என்றும், இந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளில் அலுவலகம் செல்வோர் எதிர்கொள்ளும் சவால்களை மனதில் கொண்டு இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ: கொரோனா தடுப்பூசி போட செல்பவர்களுக்கு UBER அளிக்கும் இலவச சவாரி: விவரம் இதோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR