உலகின் 3வது மிக மதிப்புமிக்க IT பிராண்டாக TCS மாறியது, முதல் இடத்தில் எந்த பிராண்ட்

சமீபத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) சந்தை மூலதனத்தின் அடிப்படையில் நாட்டின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 28, 2021, 08:57 AM IST
உலகின் 3வது மிக மதிப்புமிக்க IT பிராண்டாக TCS மாறியது, முதல் இடத்தில் எந்த பிராண்ட்

புது டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய IT ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) உலகின் மூன்றாவது மிக மதிப்புமிக்க IT பிராண்டாகும். இந்த தகவல் பிராண்ட் பைனான்ஸ் (Brand Finance) இன் ஒரு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த வரிசையில், அக்ஸென்ச்சர் (Accenture) மற்றும் ஐபிஎம் (IBM)  ஆகியவை டி.சி.எஸ்ஸை (TCS) விட முன்னணியில் உள்ளன. திங்களன்று சந்தை மூலதனத்தின் அடிப்படையில் TCS நாட்டின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.

IBM மற்றும் TCS இடையே உள்ள வேறுபாடு வேகமாக குறைந்து வருகிறது
உலகின் முதல் 10 நிறுவனங்களில் TCS, Infosys, HCL மற்றும் Wipro ஆகிய நான்கு இந்திய நிறுவனங்களை இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸின் அறிக்கையின்படி, மூன்றாம் தரவரிசை TCS மற்றும் இரண்டாம் தரவரிசை IBM இடையேயான இடைவெளி வேகமாக குறைந்து வருகிறது, மேலும் TCS இன் பிராண்ட் மதிப்பு 11 சதவீதம் உயர்ந்து 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

ALSO READ | ரிலையன்ஸுக்கு பிறகு உலகின் மிக மதிப்புமிக்க இந்திய IT நிறுவனம் TCS

முக்கிய சேவைகளுக்கான தேவை அதிகரித்ததால் TCS இன் வருவாய் வேகமாக வளர்ந்தது மற்றும் 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மட்டும் 6.8 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்நிறுவனம் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் லாபம் ஈட்டியுள்ளது, மேலும் வரும் ஆண்டு அதற்கு சிறந்ததாக இருக்கும் என்று நம்புகிறது.

முதல் 10 இடத்தின் விவரங்கள்
அக்சென்ச்சர் (Accenture) உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் வலிமையான ஐடி சேவை பிராண்டின் தலைப்பை 26 பில்லியன் டாலர் மதிப்புடன் தக்க வைத்துக் கொண்டது, அதே நேரத்தில் ஐபிஎம் 16.1 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அந்த அறிக்கையின்படி, பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் இன்போசிஸ் நான்காவது இடத்தையும், எச்.சி.எல் ஏழாவது இடத்தையும், விப்ரோ ஒன்பதாவது இடத்தையும் பிடித்தன.

ALSO READ | விப்ரோ Azim Premji உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு... காரணம் என்ன...!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News