சாலை விபத்தினை தடுக்க UBER-ன் புதிய முயற்சி!
மத்திய அரசுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புனர்வில் ஈடுபட UBER முடிவுசெய்துள்ளது!
மத்திய அரசுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புனர்வில் ஈடுபட UBER முடிவுசெய்துள்ளது!
சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது UBER நிறுவனம் மத்திய சாலை போக்குவரத்து கழகத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.
இதன்படி UBER மொபைல் செயலியானது, தன் இணை சார்பு நிறுவனங்களுடன் இணைந்து சாலை விழிப்புனர்வு செய்திகளை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களினாலும், சாலை விதிமுறை மீறல்களினாலும் ஆண்டிற்கு சுமார் 5 லட்சம் விபத்துக்கள் நடப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 1.5 லட்சம் விபத்துக்கள் மரணத்தில் முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!
இந்நிலையில் இந்த எண்ணிக்கையினை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு, பிரபல அன்லைன் வாகன வாடகை நிறுவனமான UBER உடன் இந்த திட்டத்தினை திட்டமிட்டுள்ளது!